கனகவேல் கொலை பழியை ராஜா மீது போட..சத்தியமாக நான் செய்யல சார் என்று ராஜா கூறுவதை கேக்காமல் கனகவேல் அருகில் உள்ள போலீஸிடம் சார் முகிலன் இறந்த கேஸ க்ளோஸ் பண்ணிடுங்க குற்றவாளி ராஜா....ராஜா இல்லை சார் நான் உண்மையாவே ஒன்னும் பண்ணல...என்று ராஜா மன்றாட..இதை கோர்ட்டில் சொல்லு என்று முடித்தான் கனகவேல்...
அப்போது அங்கிருந்து ஒரு போலீஸ் வேகமாக கனகவேலை நோக்கி வந்தான் சார்,சார்...என்று கூறியவாறு...என்னய்யா சொல்லு என்ற கனகவேலிருக்கு இடி போல் ஒரு அதிர்ச்சியை சொன்னான்... "சார்,மிருதுளாவோட கால் ஹிஸ்டிரிய பார்க்கும்போது கடந்த 6 மாசமா இரவு பகல் பக்காம ஒரு நம்பர்ல பேசிருக்காங்க"என்று அந்த போலீஸ் சொல்ல ..ஹ்ம்ம் ஆமாம்,முகிலனோட நம்பரா இருக்கும் என்று கனகவேல் கூற..இல்லை சார்,அந்த நம்பர் ரிஜிஸ்டர் ஆகிருக்கிறது வேற பேருல சார் என்று கூறினான்...
மிருதுளா மிருதுளா மிருதுளா அவளை கூப்பிடுங்க என்று கத்தினான் கனகவேல்..
மிருதுளாவிடம்..
முகிலனை லவ் பண்ணுனதா சொன்ன..ஆனா உன்னோட கால் ஹிஸ்டிரிய பார்த்தா அப்படி தெரியலையே...உண்மைய சொல்லு நீ மறைக்கிறதால ஒரு நல்லவன் தண்டிக்க படலாம்,,இப்போ சொல்ல போறியா இல்லையா என்று கூறி மேசையை தட்டினான் கனகவேல் ..பயந்த மிருதுளா அழுதாள்...மெல்ல மெல்ல சொல்ல தொடங்கினாள்...
எனக்கு முகிலன் ப்ரியாவை லவ் பண்றான்னு தெரிஞ்சு விலகி போனேன்..பிறகு கொஞ்சோ நாள்க்கு பிறகு அங்க இருந்து ஒரு செய்தி..ப்ரியாவோட பிரேக் அப் ஆகிட்டுன்னு பிறகு நாங்க மறுபடியும் நல்லா பேசினோம்..சிம்போசியம்(முகிலன் குத்துபட்ட நாள்) அன்னைக்கு முகிலனையும் ப்ரியாவையும் சேர்த்து பார்த்தேன்..கோவம் வந்திச்சு ராஜாட்ட அழுது புலம்பினேன்..பிறகு முகிலன் தனியாக இருந்தான் அப்போ அவன்கிட்ட போய் சண்டை போட்டு நியாயத்தை கேக்க போனேன்..
அன்று..
என்னாச்சு இப்படி கோவமா இருக்க?? என்று முகிலன் கேட்டான் ..டேய் இப்படி நம்ப வச்சி ஏமாத்துரியே என்று கேட்டு முகிலனை பளார் என்று அரைந்தாள்..இப்போ என்ன ஆச்சுன்னு கேட்டேன் உனக்கு என்ன பைத்தியமா என்று முகிலன் கேக்க..ஆமாம் உன் மேல இவ்வளவு நாள் இருந்திச்சு இப்போதான் தெளிஞ்சிச்சு,என்னை 6 மாசமா காதலிச்சு ஏமாத்திட்டியே ப்ரியா கூட பேச மாட்டேன்னு தான சொல்லி லவ் பண்ணுன என்னை..என்று கூறி அழுதாள்..நாம லவ் பண்றோமா என்ன? என்று கேட்டான் முகில்..இதோ பாரு நம்மளோட சேட்ஸ்,கால்ஸ் என்று மிருதுளா தனது போனை முகிலனிடம் காண்பிக்க..அப்போது ரமேஷ் வந்தான் "டேய் அது என்னோட வாட்ச் ஒழுங்கா தந்திரு, பார்க்க விலையுயர்ந்த வாட்ச் மாதிரி தெரிஞ்சோடன என்கிட்ட சண்டை போட்டுட்டு எடுத்துட்டு ஒடுறியா?" என்று ரமேஷ் முகிலனின் சட்டையை பிடிக்க ..முகில் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று கூறி மிருதுளா போனில் இருந்து அவள் ஒரு நபரிடம் பேசுவதாக சொன்ன எண்ணிற்கு கால் செய்தான்..அப்பொழுது ரமேஷ் மொபைல் ஒலித்தது...ரமேஷ் தனது போனை எடுத்து ஹலோ என்று கூற ..அந்த ரமேஷின் ஹலோ ஒலி மிருதுலாவின் போனில் ஒலித்தது ...முகிலன் மிருதுளாவிடம் இத்தனை நாள் ரமேஷ் தான் என்னை மாதிரி உன்கிட்ட பேசிருக்கான் என்று கூற..ரமேஷ் செய்வதறியாது நின்றான்..முகிலன் ரமேஷை அடிக்க சண்டை உருவானது...போதும் போதும் என்று மிருதுளா தடுத்தாள் ..ரமேஷ் பேச தொடங்கினான் இப்போவாச்சி உனக்கு தெரிஞ்சிச்சே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் முகில் மாதிரி நடிக்க..டேய் இன்னைக்கு கருப்பு கலர் டிரஸ் போட்டுட்டு போ,,இன்னைக்கு பிங்க் கலர் போட்டுட்டு போன்னு அவனுக்கு சொல்லி சொல்லி அலுத்து போய்ட்டேன்..இனிமே கவலையே இல்லாம என்னோட காதலி கூட பேசுவேன் என்று கூறி சிரித்தான்..
YOU ARE READING
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????