இப்பொழுது...
காவல் நிலையத்தில்...
சுப்புராஜ் போலீசிடம் அய்யா என் தம்பியை வர சொன்னீங்களே வந்துட்டான் அய்யா என்றார்..ம்ம் நீங்க வெளியே இருங்க உங்க தம்பிய உள்ள வர சொல்லுங்க என்றான் கனகவேல்.... அப்போது அதை கேட்ட அப்துலின் முகத்தில் குழப்பம் சூழ..அதை கவனித்த கனகவேல் என்னாச்சு??என்று கேட்க.."சார் நான் இப்போ ஒரு ரவுடி கும்மல் எங்க காரை தடுத்தாங்கன்னு சொன்னேன்ல அந்த ரவுடி கும்மல்லோட தலைவன் தான் சார் அந்த காளி"என்றான் அப்துல்.
ஒரு நபர் உள்ளே வர...நீங்க தான் முகிலன் அப்பாவோட பிசினஸ் பார்ட்னரா?? என்று கேட்டதற்கு ஆமா என்றான் கம்பீரமாக...அவனிடம் கனகவேல் உங்க பெயர் என்ன என்று கேட்டதற்கு..அவனோ ''என் பெயர் காளி" என்றான்…
காளி அங்கு அமர்ந்திருக்கும் அப்துலை கண்டான்..அப்துல் காளி பார்த்தவுடன் கீழே குனிந்தான்..
அப்துலின் அசௌகரியத்தை கண்ட கனகவேல் காளியிடம்"சரி நீங்க வெளில இருங்க நான் உங்களை கூப்பிடுகுறேன்"என்றான்..காளி வெளியே சென்றான்..
சரி இப்போ சொல்லு அன்னைக்கு வேற என்ன நடந்திச்சுன்னு? என்ற கேட்ட கனகவேளிடம் அப்துல் கூற தொடங்கினான்..
**************************************
ஆறு மாதங்களுக்கு முன்பு.....
ரவுடிகள் காரை சுற்றி வளைக்க ...ராஜா முகில் ,பிரியா அப்துல் சுப்புராஜ் ஆகிய அனைவரும் செய்வதறியாது முழித்து கொண்டிருக்க.....அங்குள்ள ஒருவன் தனது பாஸ்ஸாகிய காளிக்கு கால் செய்து பையன் கிடைச்சிட்டான் போட்ரவா ஆனா இங்க ரெண்டு பெருசுங்க இருக்கு என்றான்.(கார் டிரைவர் மற்றும் சுப்புராஜ்)..தனது நண்பன் (ப்ரியாவின் அப்பா) பெயர் குறிப்பிட வில்லையே என்று நினைத்து அவசரப்படாதீங்க அவங்களோட போட்டோ எனக்கு அனுப்பிவிடு நான் என் நண்பண்ட கேட்டுகின்றேன் என்றான் காளி...சுப்புராஜ் மற்றும் கார் ஓட்டுநர் புகைப்படம் வந்தது காளி போனிற்கு ...தனது அண்ணன் போட்டோ கண்டு அதிர்ச்சி ஆகினான் காளி....
பதறி போய் தனது ஆளுக்கு கால் செய்து "டேய் ஒன்னும் பண்ணிடாத,அவங்கள நம்ம குடோனுக்கு கூட்டிட்டுவா என்றான் காளி.....
அண்ணனிற்கு (சுப்புராஜ்) தனது இந்த முகத்தை காட்ட முடியாத காளி என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்தான்....
(குறிப்பு: காளியின் ரவுடி தனம் பற்றி சுப்புராஜிற்க்கு தெரியாதபடி வைத்துக்கொண்டான்..தெரிந்தால் அண்ணன் மனம் கவலை கொள்ளும் என்பதால்)
அப்பொழுது அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விசுவநாதன் காளியைப் பார்க்க வீட்டிற்கு வந்தான்...ராசு காளியிடம் அய்யா உங்கள பார்க்க விசுவநாதன் வந்திருக்காங்க என்று கூறினான்...மண்டையில் புது ஐடியா கிடைத்தது..."விஸ்வா என் நண்பன் ஒரு பையனை போட சொன்னான் முகிலாம் அவன் பேரு அவன் கூடையே ஒரு பெரிய ஆளையும் போட சொன்னான்...ஆனா அது என் அண்ணன்...அவங்கள இங்க கூட்டிட்டு வர சொல்லிற்கேன்...நீ பக்குவமா எடுத்து சொல்லி அந்த சின்ன பையன பயங்காட்டி அந்த பொண்ண அவங்க அப்பாட்ட ஒப்படைச்சிரு மத்தவங்கள போக விட்ரு என் அண்ணன் உள்பட...ஆனால் அந்த பையன் ரொம்ப துள்ளுனானா அவனை போட்ரு...என்றான் காளி...இத உங்க ஆளுட்டையே சொல்லாமே என்று கேட்டான் விஸ்வா ..அதற்கு "அவங்களிடம் பொறுமை இருக்காது பையன போடத்தான் பாப்பாங்க ,அப்படி நடந்தா என் அண்ணன் சும்மா இருக்கமாட்டான்..பிரச்சனை பண்ணுவான் ..அதுல அவனுக்கு நம்ம ஆளுங்களால ஆபத்து .....நீனா பொறுமையா இருப்ப..என்ன ஆனாலு சரி சுப்புராஜ்க்கு ஒன்னும் ஆக கூடாது..என்றான் காளி.....
நான் மிரட்டுர மிரட்டே போதும் மீறிச்சினா நீங்க சொன்ன மாதிரி அந்த பையனை போடுவோம் என்றான் விஸ்வா..........
காளியின் குடோனில்.....
தனது கத்தியை கம்பீரமாக எடுத்து வந்தான் விஸ்வநாதன்...அங்கு முகில்,பிரியா,ராஜா,சுப்புராஜ்,கார் ஓட்டுநர்,கட்டப்பட்டிருந்தனர்....முகிலனை பார்த்ததும் விஸ்வநாதனுக்கு அதிர்ச்சி....முகிலன் விஸ்வாவைப் பார்த்து விட்டு ஒன்றும் புரியதவனாய் திகைத்தான்..விஸ்வநாதனின் கண்கள் குழப்பத்தில் சூழ தனது கையில் வைத்திருந்த கத்தியை கீழே போட்டான்.
தன் மகன் முன் கத்தியுடன் நிற்கும் தந்தை..அடுத்து என்ன??
தொடரும்..
YOU ARE READING
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????