அத்தியாயம் 11

142 12 12
                                    

மிருதுலாவும் ப்ரியாவின் அப்பாவும்

காளி மற்றும் அவனது ஆட்கள் ,ராஜா முகில் சுப்புராஜ் அப்துல் பிரியா விஸ்வநாதன் கார் ஓட்டுநர் ஆகியோரை சுற்றி வளைக்க..அதிலிருந்து தப்ப விஸ்வநாதன் சுப்புராஜின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறான்..பதறிய காளி "தப்பு பண்ற விஸ்வா, உனக்கே தெரியும் எனக்கு தேவை ப்ரியாவை என் நண்பண்ட்ட  ஒப்படைக்கிறது மட்டும் தான் வீணாக பிரச்சனை பண்ணாத"..கடைசியாக விஸ்வநாதன் ஒரு முடிவு எடுத்தான் "சரி ப்ரியாவை நீ கூட்டிட்டு போ மத்தவங்களை ஒன்னும் செய்ய கூடாது" என்று கேக்க..அதற்கு காளி சரி என்று ஒப்பு கொள்கிறான்...விஸ்வநாதன் முகிலனிடம் இப்போதைக்கு ப்ரியாவை போக விடு இந்த பிரச்சனையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றான் .."அப்பா இவள அங்க அனுப்ப சொல்றீங்களா? அங்க இவளுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுனா? என்ன பண்ண" என்று கேட்டான் முகில். அதற்கு பிரியா "எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு" முகிலன்ட்ட சொன்னாள் மேலும் அவள் காளியிடம் அடிச்சதுல "அவன் என்னை விட்டு பிரிய சம்மதிச்சிட்டானு அப்பாட்ட சொல்லிடுங்க நான் இனி முகிலனை பார்த்து பேச மாட்டேன்" என்று கூறினாள்..முகிலன் அதிர்ச்சியில் என்ன சொல்ற என்று குரலை தாழ்த்தி ப்ரியாவிடம் முணுமுணுத்தான்..அமைதியா இரு மொத இந்த பிரச்னையை முடிச்சிக்கிடுவோம் என்று பிரியா சிக்னல் கொடுத்தாள்..தனது அண்ணன் விஸ்வநாதனின் பிடியில் இருந்ததால் சம்மதித்தான் காளி....

*****************************

இப்பொழுது…

உன் பிசினஸ் பார்ட்னர் விஸ்வநாதன் இறந்துட்டான் அவனோட புள்ள தன்னோட தந்தையின் கார் விபத்தில் மர்மம் இருக்குன்னு கேஸ் குடுத்த பிறகு கொஞ்சம் நாள்ல அவனும் இறந்துட்றான்...இதுக்கெல்லாம் பின்னாடி நீ தான் இருக்கியா? என்று கனகவேல் காளியை கேக்க...இல்லை அதுக்கும் எனக்கும் எந்த சமந்தமும் இல்லை என்றான் காளி..பிசினஸ் பார்ட்னர்ஸ்னா எந்த பிசினஸ்?? கந்து வட்டி அடிதடி குத்து கொலையா ?? என்று கேட்டான் கனகவேல்...இல்லை,இரும்பு கடை தான் சார் அதுக்கு தான் நாங்க பார்ட்னர்ஸ்....என்றான் காளி..போலீஸ் அடி தெரியும்ல அப்துல விசாரிச்சதுல அன்னைக்கு நீங்க பண்ண கூத்தையும் சொல்லிட்டான்(ப்ரியாவின் கல்யாணம் அன்று நடந்தது)..இப்போ நீ நான் கேக்குற கேள்விக்கு மட்டும் உண்மையான பதில சொல்லணும்...சரி சார் சொல்றேன் என்று சொல்ல ஆரம்பித்தான்.....

கல்லூரி மர்மம்Where stories live. Discover now