"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு புரியுது கார்த்... புரியுது" "இல்லங்க உங்களுக்கு ஒன்னும் புரியல. அது என்னோட பிரச்சனை. என்னோட கஷ்டம். அது எனக்கே தெரியாம வைக்கணும்னு நீங்க யோசிக்கிறது எந்த வித்ததுலங்க நியாயம்?" - கார்த்தி "நான் அந்த அர்த்தத்துல சொல்லல..." வைஷ்ணவியை பேசவே விடவில்லை அவன், "எந்த அர்த்தத்துல சொன்னாலும் நான் புரிஞ்சிகிட்ட ஒரே அர்த்தம் உங்களோட டாமினன்ஸ் தான். என் வீட்டு ஆளுங்க வர நீங்க ரொம்ப டாமினேட் பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அது சுத்தமா புடிக்கல. உங்களோட விளையாட்டு தனத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கெடைச்சதா? ர