உள்ளத்தில்-10

723 18 1
                                    

மிருதுளா முரளி கூறியதையே நினைத்து கொண்டு இருந்தாள் "சண்டே அவன் கூட ஷாப்பிங் பண்ண போகணும்....இப்படி தெரியாத ஒருவனோடு எப்படி ஷாப்பிங் பண்ண போகுறது...இந்த கவிதா குரங்கு வேற வரமாட்டன்... நீயாச்சு அவனாச்சுனு சொல்லிட்டா...என்ன பண்ணுறது...அவன் பெயர் கூட கேக்கல...... அன்னிக்கு தேட்டரல கவிதா என்ன இழுத்துட்டு வரும் போது அவன் பிரின்ட் அவன் பெயரை சொல்லி கூப்பிட்டான்ல....என்ன சொன்னான் ஹ்ம்ம் எதோ ஒரு பெயர் சொன்னானே"என்று வீட்டின் மொட்டை மடியில்  நிலாவொளியில் நின்று யோசித்து கொண்டிருந்தாள் மிருதுளா
அப்பொழுது அவள் பின்னிருந்து வந்து ஒரு உருவம் அவளது கண்களை தனது கைகளை கொண்டு முடியது "ஹா எரும மாடு நீதானு தெரியும் கையேடு "என்றாள் மிருதுளா
"கண்டு பிடிச்சிட்டியா பரவா இல்ல என்னோட தங்கச்சிக்கும் அறிவு இருக்கு "என்று அவள் முன் வந்து நின்றான் மோகன்
"இது ஸ்பெஷல் அறிவல்ல தேவ இல்ல இப்படி சின்னப்பிள்ள தனமா நீதா பண்ணுவ வேறயாரு பண்ணப்போற ஆல் வளந்து இருக்கியே தவிர அறிவு வளரல"என்றாள்
"நான் சின்ன பையனா நடந்துகொள்ளுறது இருக்கட்டும் இருட்டுல நீ என்ன பண்ணிட்டு இருக்க "என்றான்
"சும்மாத்தா நிக்குற முழுநிலா அழகா இருக்குல்ல அதா பாத்துட்டு இருக்க"
மோகன் அவளை ஒரு மார்க்கமா பார்த்து "யாரு அந்த பைய "என்றான்
மிருதுளாக்கு தூக்கி வாரி போட்டது இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டு "என்ன உளற அதலா எதுவும் இல்ல ....ஆஆஆ எனக்கு தூக்கம் வருது குட் நைட் ப்ரோ "என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நழுவி தனது அறையில் புகுந்துகொண்டாள்

நாட்கள் மிருதுளாக்கு ஆமை போல் நகர்ந்தன எப்பொழுது ஞாயிறு வரும் என்று எங்க துடங்கி இருந்தாள் அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை கைபேசி எண்ணை வாங்கி சென்றதோடு சரி அவன் அவளை அழைக்க வில்லை "ஐயோ மிருதுளா என்ன இப்படி யாருனே தெரியாத ஒருத்தன நினைச்சி உறிக்கிட்டு இருக்க உன்ன மாதிரி அவனு இருந்தா உனக்கு கால் பண்ணியிருப்பன் நீதா லூசு மாதிரி அவன நினைச்சிட்டு இருக்க நாளைக்கு சண்டே கூப்பிடுவானா இல்லையானு தெரியலையே மறுபடியும் பாரு அவனையே நினைச்சிகிட்டு ஒழுங்கா படுத்து தூங்கு "என்று அவள் மனதும் மூளையும் சண்டையிட்டு கொண்டன ஒருவழியாக மனதை மூளை வெற்றி கொண்ட பொழுது மிருதுளா தூங்கி போனாள்

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now