"இவனா இவன் எப்படி நம்ம ரூம்ல"என்று மனதில் நினைத்தவள் வெளியே "யாரு நீ?..உனக்கு என்ன வேனும்?..என்னோட ரூம்ல நீ என்ன பண்ணுற?"
என்று அவன் கையை தடிவிட்டு வினவினாள்.
"நான் கீர்த்தி அண்ணா...மோகன் ரூம்னு நினைச்சி வந்துட்டேன் ...சாரி கதவு தொறந்து இருந்தது அதான் "என்று கூறிவிட்டு வெளியே செல்ல போனான்."கதவு திறந்து இருந்தா உள்ள வந்து விடுவியா பொறுக்கி"என்று மூணு முனுத்தாள்.
அது கேட்டு கோபமாக திரும்பி பார்த்தவன் முன்னோக்கி வந்தான் அதைக்கண்டு பின்னோக்கி சென்ற மிருதுளா சுவரில் இடித்து மிரண்டு நின்றாள்.
அவளை மேல இருந்து கீழ் வரை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய அதை மறைத்து அவள் அருகில் சென்று இரு கைகளையும் அவளது இரு புறமாக சுவரில் ஊன்றி நின்றுகொண்டு "பொறுக்கி என்ன செய் வா தெரியுமா ?"இதழின் ஓரம் புன்னகை உடன் வினவினான்.
"ஐயோ வாய வைச்சிட்டு சும்மா இல்லாம சும்மா போனவன் சொறிஞ்சி விட்டியே மிருதுளா...என்ன செய்ய போறானு....கண்ணலையா தின்னுருவா போல...ஓம்ஜி என்ன இவன்ட இருந்து காப்பாத்து ப்ளீஸ் "என்று மனத்தினுள் தனது இஷ்ட தெய்வதிடம் வேண்டியவள் வெளியே தைரியத்தை வரவழைத்து கொண்டு
"என்ன பண்ணுற இப்போ இந்த ரூமை விட்டு போறியா இல்ல எல்லாரையும் கூப்பிடவா" என்றாள்.
"நான் கேட்டத்துக்கு பதில் இல்லை இது"என்றான்.
"சார் ப்ளீஸ் காலங்காதால வீடு தேடி வந்தது வம்புபண்ணிறிங்களா தயவு செஞ்சி வெளிய போங்க யாரது பாத்த தப்பா நினைக்க போறாங்க"என்றாள்.
கிருஷ்ணன் அவள் கூறியதை காதில் வாங்காமல் "சரி விடு பொறுக்கி என்ன பண்ணுவான்னு ஒரு சாம்பிள் காட்டவா "என்று அவள் இதழ் நோக்கி குனிய பயத்தில் அவள் தனது கண்களை மூடிக்கொண்டாள்.
YOU ARE READING
உள்ளத்தில் உன்னை வைத்தேன்
Romanceதன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.