முரளியின் வீடே இரண்டாகும் அளவுக்கு உறவினர்களின் பேச்சும் சிரிப்புமாக கோலாகலம் பூண்டிருந்தது முரளி வீட்டார் அனைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர் என்னதான் வீடு கலை காட்டினாலும் சில விருந்தினர் ஆதங்கம் என்ற பெயரில் முரளியின் குடும்பத்தினரை வெதனைக்குள்ளாகவும் செய்தனர் "என்ன கிருஷ்ணவேணி உன்னோட பொண்ணுக்கா மாப்பிள்ளை கிடைக்காது நம்ம தகுதிக்கு ஏத்த மாப்பிள்ளை பார்க்கக்கூடாது "என்றாள் வந்தவர்களில் ஒருத்தி
அவள் கேட்ட கேள்வி சங்கடத்தை ஏர் படுத்தினாலும் அதை மறைத்து புன்முறுவலுடன் "தகுதி என்ன தகுதி இருவருக்கும் மனம் ஒத்து ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழ்வின் இறுதிவரை கைகோர்த்து நடந்தால் போதாதா ஒருவருக்கு ஒருவர் விரும்புகின்றனர் இதற்க்கு மேல் என்ன வேண்டும் "என்று முன் இருப்பவருக்கு இனி பேச எதுவும் இல்லை என்று முகத்தில் அறைந்தார் போல் கூறிவிட அத்துடன் அனைவரும் அமைதியாகி விட்டிருந்தனர்.ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டினரும் வந்திருந்தனர் மணமகன் வரவும் அனைவரின் கவனமும் அவர்களிடம் சென்றது மோஹனை கண்ட அனைவரும் பிரமித்து போனார்கள் அவனது ஆறடி உயரமும் மாநிறமுமாக நமூர்நாயகன் விஷால் போல இருக்க "நம்ம பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளையாக தான் இருக்காரு "என்று பெருமை பேசிக்கொண்டனர் இதை கேட்ட முரளியின் வீட்டினரும் மகிழ்ந்தனர்.
அதுவும் மாப்பிள்ளையுடன் மிருதுளாவை கண்ட அனைவரும் சொக்கித்தான் போனார்கள் மயில் வண்ண நிறத்தில் காஞ்சிபட்டுத்தி அழகிய மயில் போல அசைந்தாடி வந்த அவளை மெய் மறந்து நின்று ரசித்தனர்.
மறவர்களுக்கு இப்படி என்றால் நமது நாயகனை கேட்கவா வேண்டும் திண்டாடி போனான் அவனால் அவனது தங்கையின் நிச்சய வேளையில் இடு படமுடியாமல் திணறி போனான்
"ஐயோ இப்படி வந்து கொல்லுறாளே "
மிருதுளா எங்கே சென்றாலும் அவனது கண்கள் அவளிடமே சென்றது அவன் அவளை மெய் மறந்து பார்த்து கொண்டிருக்கும் போது பின்னிருந்து யாரோ அவனது கண்களை மூட "யாருடா இது சிவ பூஜையில் கரடி மாதிரி" என்று வாய்விட்டே கூறிக்கொண்டு கைகளை எடுத்தான்.
YOU ARE READING
உள்ளத்தில் உன்னை வைத்தேன்
Romanceதன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.