உள்ளத்தில் -8

829 21 1
                                    

கீர்த்தி வீட்டை அடைந்தது அவர்கள் வீட்டினுள் செல்லாமல் வாசலிலேயே நின்று பேசிவிட்டு தனது ஸ்கூட்டியில் வீட்டை அடைந்தாள்
வீட்டினுள் சென்றவளை தடுத்து நிறுத்தியது அவளது அன்னையின் குரல் "ஹே என்ன பகலியே கனவு காணுற"
"என்னமா கேட்ட "என்றாள் மிருதுளா
"சாப்டியானு கேட்டேன் "என்றார்
"மால முடிஞ்சது "என்று கூறிவிட்டு வேகமாக படிகளில் ஏறி தனது அறையின் கதவை படார் என அடைத்துவிட்டு அப்படி கதவில் சாய்ந்துஅமர்ந்து அழ தொடங்கினாள் அவளது அழுகை முடிவில்லாமல் தொடர்ந்தது

கீர்த்தியின் வீட்டில் "என்னமா கீர்த்தி மிருதுளா ஏன் ஒருமாதிரி டலா இருந்தா? "என்றார் கீர்த்தியின் அன்னை
"தெரியலமா நல்லதா இருந்தா....திடீர்னு என்ன ஆனது தெரியல.... நா என்னோட பிரின்ட பார்த்துட்டு வந்ததும் சாப்பிட போனோம்.....அப்பலிருந்து மிருது முகம் சரி இல்ல" என்று கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த முரளியை பார்த்தாள். அவனது முகத்தில் மாறுதல் தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தால் அவனது நெற்றி முடிச்சுகள் இட்டன பின்பு கீர்த்தி அவனை கவனிப்பதை கண்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாத மாதிரி காட்ட தனது உணர்வுகளை தனது கை முஷ்டியில் அடக்கினான்
"இவன் என்ன ரியாக்ஷன் குடுக்கிறா....எதையுமே கண்டு பிடிக்க முடியலியே....ஆனாலும் ஏதோ இருக்கு....என்னனு கண்டுபிடிக்கணும் .....கீர்த்தி நாம இத இப்படியே விடக்கூடாது .....மிருதுவுக்கும் ப்ரோக்கும் நடுவுல எதோ இருக்கு...அது என்னனு கண்டு பிடிக்கணும் பிடிக்குற என்னனு கண்டு பிடிக்குற ஆஆஆ"என்று நாம பண்டு சார் ஸ்டைல தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
கீர்த்தி தனக்குள் பேசுவதை கண்டு "என்னடி தன்னால பேசுற"என்று தலையில் ஒரு தட்டு தட்டினார் கீர்த்தியின் அன்னை
"மா எதுக்கு அடிச்ச"
"பின்ன லூசு மாதிரி தனியா பேசுனா அடிக்காம கொஞ்சுவாங்களா "
"என்னது லூசா நீ லூசு உங்க அப்பா லூசு உன்னோட குடும்பமே லூசுதா"என்றாள் எப்பொழுதோ டிவியில் பார்த்த வடிவேலு காமெடியை
"ஹா ஹா ஹா சரியா சொன்னமா எனக்கு வராத தைரியம் என்னோட பொண்ணுக்கு இருக்கு நா இவளோ நாள் என்னோட மனசுக்குள்ள வச்சிட்டு வெளிய சொல்லமுடியாம இருந்ததை நீ சொல்லிடமா"என்றார் கீர்த்தியின் தந்தை
"உங்க ரெண்டு பேருக்கும் கொழுப்பு கொஞ்சம் அதிகமாயிடுச்சி ஒரு ரெண்டு நாள் பட்டினி போட்டா சரியாகிடும்"
" அம்மா தாயே தெரியாம சொல்லிட்டோம் சோத்துல கைவச்சிடாத" என்று இருவரும் ஒன்றாக சொல்ல முறைத்து கொண்டு இருந்த கீர்த்தியின் அன்னை சிரித்து விட்டார்
"அந்த பயம் வேணும் போங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க "என்றார்

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now