உள்ளத்தில்-5

954 18 1
                                    

இரவு உணவின் போது மஞ்சு "எங்க சம்பந்தி வீட்டுல ...இன்னும் நாலு நாள்ல நிச்சயம்னு சொல்லிட்டாங்க .....அவங்க அளவுக்கு நம்மளால முடியலைனாலும் தங்கத்துல ஓரு ஆரம் வாங்கி நம்ப மருமகளுக்கு போடணும் அப்பத்தா நம்மாளுக்கும் சொந்தபந்தக நடுவுல மரியாதையா இருக்கும்"என்றார்.
"சரி மஞ்சு அப்படியே செஞ்சிடலாம்" என்றார் மனோகர்.
மோகன் மென்பொருள் நிறுவனமான சிடி ஸ்யில( cts) மென்பொருள் பொறியாளராக இருக்க..,மாத வருமானம் ஓரளவு இருந்தாலும்...கீர்த்தியின் குடும்பம் பல கோடி சொத்துடையவர் என்பதால் அவர்கள் உயர்ந்து இருந்தனர்.
அவர்கள் வசதியில் மட்டுமல்ல குணத்திலும் உயர்ந்தவர்கள் என்பதை கீர்த்தியின் திருமண விஷயத்திலும் நிரூபித்தனர்... கீர்த்தி தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் வீட்டில் இருக்க விரும்பாமல் தான் படித்த மென்பொருள் பொறியியல் சம்பந்தப்பட்ட வேலையில் சேரவிரும்பி கேம்பஸ் இண்டெர்வில் கலந்து கொண்டாள்...அதில் வெற்றி கொண்டு சிட்ஸ்யில் வேலைக்கு சேர்ந்தாள்....அங்கே மோகனின் நட்பு கிடைக்க அது பின்பு காதலாக மலர்ந்தது ...அவர்களது காதலை இரு வீட்டிலும் கூற முதலில் ஸ்டேட்டஸ் என்று கூறினாலும் பின்பு கீர்த்தியின் உறுதி கிருஷ்ணனின் தலையிட்டால் வெற்றி கண்டு நிச்சயம் வரை வந்தது...
"மிருதுளா என்ன ரெண்டு இட்டிலி இவளோ நேரமா சாப்பிடுற இன்னும் ரெண்டு வைக்கவா" என்று மஞ்சு வினவ அதை காதில் வாங்காமல் மிருதுளா வேறு உலகத்தில் சஞ்சரித்து இருந்தாள் "இவனுக்கு உண்மையாவே நம்மல தெரியலிய இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிகனா ஒண்ணுமே புரியலையே"என்று யோசித்து கொண்டு இருக்க அவளை நிஜ உலகிற்கு கொண்டுவந்தது மஞ்சுவின் அடி
"மா எதுக்கு அடிச்ச"என்று முகத்தை கடுகடுத்து கொண்டு கேட்ட மிருதுளா விடம்
"எரும எவ்வளவு நேரமா கேக்குற இட்டீலி வேணுமான்னு பதில் சொல்லாம கனவு கண்டு இருக்க... மோகன் கல்யாணம் முடிஞ்சதும் சீக்கரம் ஒரு மாப்பிள்ளை பார்த்து அடுத்த முகூர்த்தத்தி லே உனக்கும் முடிக்கணும்"என்றார் மஞ்சு
"மா இப்போ எதுக்கு என்னோட கல்யாணத்த பத்தி பேசுறீங்க..எனக்கு அதுலாம் இன்டெரெஸ்ட் இல்ல என்ன விட்டு விடுங்க.., நா இப்படியே இருந்திடுற ப்ளீஸ்"என்றாள்
"கட்டமாறு பிஞ்சிடும் கல்யாணம் வேண்டாமா இப்படி நீ கடைசி வரைக்கும் இருக்கவா உன்ன கஷ்டப்பட்டு வளத்தோம்" என்று கண்களில் வழிந்த கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்து கொண்டு வினவினார் மஞ்சு
"மா ப்ளீஸ் அழாத இனிமே இப்படி சொல்லமாட்டான் போதுமா என்னோட ஸ்வீட் மஞ்சுல சிரி சிரி "என்றாள் மிருதுளா
"போடி கழுத இன்னொரு தடவ கல்யாணம் வேண்டான்னு சொல்லு அப்ப இருக்கு உனக்கு"என்றார் மஞ்சு
இதை ஓரமாக இருந்து கவனித்து கொண்டு இருந்தார் மனோகர்.
மிருதுளா உணவு முடித்து விட்டு தனது அறைக்கு செல்ல படி ஏற மிருதுளா என்ற அவளது தந்தையின் அழைப்பில் திரும்பினாள்
"என்னமா அம்மாட்ட கல்யாணம் வேண்டா அது இதுனு பேசுற அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி இந்த கல்யாணம் வேண்டான்னு சொன்ன என்னு கேட்டதுக்கு ம்பிஎ( MBA)படிக்க போற...நான் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகலைனு சொன்ன .....சரினு சொல்லி படிக்க லண்டன் அனுப்புன.... அப்புறம் கொஞ்சநாள் வேளை பக்கப்போற அப்பத்தா இந்தியா வந்தா நல்ல வேலையும் சலரி கிடைக்கும்னு சொன்ன அதுக்கும் சரினு சொன்ன....இப்போ என்ன சொல்லி கல்யாணத்த வேண்டான்னு சொல்ல போற"என்றார்

அவரை அதிர்ந்த பார்வை பார்த்த மிருதுளா அவரிடம் தயங்கிய படி "அப்பா நா வந்து"என்று இழுக்க
"என்னமா எதுனாலும் சொல்லு அப்பா எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்...
"இல்லப்பா அது வந்து என்ன கூறி கல்யாணம் வேண்டாம்னு சொல்ல"என்று மனதினில் மறுக்கினாள்
அவள் தயங்குவதை பார்த்து "என்னமா யாரையும் விரும்புரிய யாருனு சொல்லு அவங்க அப்பா அம்மாட்ட நா பேசுற எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம்" என்றார்

"இல்லப்பா அப்படியெல்லாம் எதுவும் இல்லை"என்றாள்
"சரி மா அப்ப உனக்கு மாப்பிள்ளை பக்கவா"என்றார்

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்பா"என்றாள்
"நீ ஏற்கனவே ரொம்ப டைம் எடுத்துட்ட இன்னுமும் டைம் கேக்குற முடியதுமா....இதுவரைக்கும் உன்னோட இஷ்டப்படி விட்ட இனிமே முடியாது...உனக்கு ஒரு மாப்பிள்ளை பாக்கலாம்னு இருக்க" என்று கூறிவிட்டு தன் அறையில் நுழைந்து விட்டார்
மிருதுளாக்கு என்ன செய்வது என்று புரிய வில்லை தன் கால் போனபோக்கில் தனது அறையில் உள்ள படுக்கையில் விழுந்தாள்
"கல்யாணம் என்னோட வாழ்க்கையில் நடக்குமா...என்னால் அவனை மற்றந்துட்டு வேற ஒருவனை மணக்க முடியமா...கடவுளே நீதா வழி சொல்லணும்"என்று மனதில் நினைத்து கொண்டு பயண களைப்பில் தூக்கிவிட்டாள்.

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now