உள்ளத்தில்-4

1K 18 3
                                    

அவன் முத்தம் இட்டு விடுவானோ என்ற பயத்தில் கண்கள் முடியவள்...அவன் அறையில் இல்லாது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"நல்லவேளை கிஸ் பண்ணாம போயிட்டான்...கிஸ் மட்டும் பண்ணியிருந்த நடக்கிறதே வேற....அந்த பயம் இருக்கனும்....அந்த பயம் "என்று விஜய் படம் டைலொகுகே வெளியே கூறியவள் மனதில்" கிஸ் பண்ணா அப்படியே பாஞ்சி அடிச்சிடுவியாகும் "என்றது அவளது மனச்சாட்சி.

வெளியே வந்த கிருஷ்ணை கண்ட மோகன் "ஹே முரளி எப்பவந்த"என்றான்.

முரளி கிருஷ்ணனும் மோகனும் ஒத்த வயதினர் என்பதால் பெயர் சொல்லியே அழைத்தனர்.
"இப்பதா உன்ன தேடித்தா வந்த....அப்பா அம்மாவும் வந்தது இருகாங்க வா போகலாம்".

ஹாலில் பெரியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்

"வாங்கப்பா வந்தது உக்காருங்க"என்றார் மனோகர்.
இருவரும் அவருக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.
"உங்க பொண்ணு மிருதுளா வந்து இருக்கானு கீர்த்தி சொன்னா...ஏர்போர்ட் க்கு வர முடியல...அதான் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு...நிச்சயதார்த்தக்கு எங்கே சைடுல என்ன என்ன பண்ணனும்னு கேட்டு போகலாம்னு வந்தோம்" என்றார் கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவவேணிக்கு மனோகர் குடும்பம் ரொம்ப பிடித்து விட்டது...மனோகரின் தங்கச்சி என்ற அழைப்பு கிருஷ்ணவேணிக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாத குறையை தீர்ந்ததாகவே நினைத்தாள்...அதனால் மிருதுளாவை முரளி கிஷ்ணனுக்கு மணமுடிக்க என்னினாள்

"அம்மா எதுக்கு அவள பாக்க இவ்வள்ளோ ஆர்வமா இருக்காங்க...எதாவது பிளான் பண்ணுறாங்களோ...எதுக்கு கொஞ்சம் உஷாரா இருக்கனும்"என்று மனதில் நினைத்து கொண்டான் முரளி கிருஷ்ணன்.
"அதனால என்னமா இதோ மிருதுளாவை இப்ப வர சொல்லுற "என்று கூறிவிட்டு மஞ்சு என்றார்.
அவரின் கூற்று புரிந்தவராய் மிருதுளாவை அழைக்க சென்றார் மஞ்சு
"அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே மிருதுளா படிகளில் இறங்கி வந்தாள்... இதோ மிருதுளாவே வந்துட்டா "என்றார் மஞ்சு.
பிங்க் நிற சுடிதாரில் புதிதாக புத்த ரோஜா மலர் போல் இருந்தாள் மிருதுளா
மிருதுளாவை பார்த்ததும் பிடித்து விட்டது கிருஷ்ணவேணிக்கு
"வாமா என் நிக்கிற வந்து உக்காரு"என்று தன் அருகில் அமரவைத்தாள் கிஷ்ணவேணி.

மிருதுளா அவரை பார்த்து அழகியது புன்னகையை உதிர்த்து கொண்டு அவர் அருகில் அமர்ந்தாள்
கிருஷ்ணனை பார்த்து முறைகவும் தவறவில்லை

"எப்பா கண்ணாலையே எரிச்சிடுவா போல இவட கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டுதா இருக்கனும்"என்று மனதில் நினைத்து கொண்டான் ...வெளியே "ஹாய் மிருதுளா எப்படி இருக்கீங்க "என்று வினவினான்?.
எதோ இப்பதா பாக்குற மாதிரி அவளும் முறிப்பதை விடுத்தது "நல்லா இருக்கேன்"என்றாள்.
"டேய் எப்படி டா முதல்தடவ பாக்குறமாதிரி நடிக்க முடியுது பொறுக்கி நீ இன்னும் திருந்தளிய அப்போ எப்படி இருந்தியோ அப்படியே இருக்க "என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

பெரியவர்கள் மோகன் மற்றும் கீர்த்தி நிச்சியதார்த்துக்கு செய்ய வேண்டிய முறைகளை கேட்டு தெரிந்து கொண்டு விடை பெற்றனர்.
ஆனால் மிருதுளாவின் மனது நிம்மதி இல்லாமல் தவித்து கொண்டு இருந்தது "சே இவன் எதுக்கு மறுபடியும் வந்தான்...இவன பக்கக்கூடாதுனு ஊர அப்பா அம்மா எல்லாரையும் விட்டு தனியா லண்டன் போன இப்ப மறுபடியும் நம்ம வாழ்க்கைல வரானே எப்டியாச்சு அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் லண்டன் போய்டணும் மறுபடியும் இவன பாக்கவே கூடாது கடவுளோ"என்று மனதில் நினைத்து கொண்டாள்.
நம்ம எது நடக்கணும் நினைக்கமோ அது நடக்காது எது நடக்கக்கூடாதுனு நினைக்கமோ அதுதா நடக்கும் இது யூனிவேர்சல் பாக்ட்( universal fact).

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now