உள்ளத்தில்-13

883 17 5
                                    

பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்த மிருதுளா அவளையும் அறியாமல் தூங்கிவிட்டாள் ...மறுநாள் காலையில் ஜன்னலின் வழியே வந்த சூரிய வெளிச்சம் பட்டு கண்விழித்தாள் ...உடம்பை வளைத்து ஒருக்களித்து படுத்திருந்ததால் கால்கள் மரத்து வலியடுத்தது.மெதுவாக எழுந்து குளித்து விட்டு அன்னையை தேடி சென்றாள் ......உணவருந்தும் மேஜையில் அமர்ந்து மிருதுளாவின் அண்ணனும் தந்தையும் உணவருந்தி கொண்டிருந்தனர் அவர்கள் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள்
"என்னமா உடம்பு எதுவும் சரியில்லையா "என்று வினவினார் மிருதுளாவின் தந்தை
"அதலா இல்லப்பா நேத்து ஷாப்பிங் போனோம்ல அதா "என்று சமாளித்தாள்
அவள் அமர்ந்திருப்பதை கண்டு அவளுக்கும் உணவை பரிமாறினார் அன்னை
"மிருது ஒரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு உன்னோட அண்ணா நிச்சயதார்த்தக்கு என்னோட பிரின்ட் வரான் அவனோட பையனும் லண்டன்ல ஒர்க் பண்ணுறானா ...அவனும் அங்க ஒர்க் பண்ணுற பொண்ணுதா பாக்குறாங்களாம் ...அதா நீ அங்க ஒர்க் பண்ணுறது தெரிஞ்சி கேட்டான் ...நானும் ஓகே சொல்லிட்டேன்... பையனையும் கூட்டிட்டு வராதா சொல்லிருக்கான்..நீ பேசி பாரு உனக்கு ஓகேனா கல்யாண நாள் முடிவு பண்ணிடலாம்"என்று குண்டை தூக்கி போட்டார்

தந்தை கூறியதை கேட்டு அதிர்ந்தாள் இருந்தும் அவளுக்கு கரணம் சொல்லி தட்டிக்கழிக்க வழியெதுவும் இல்லை "சும்மா பக்கத்தான வராங்க அப்புறம் பாத்துக்கிடலாம் "என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்
அவள் அமைதியாக இருப்பதை கண்டு "என்னமா ஒன்னும் சொல்லாம இருக்க "என்று அவள் சிந்தனையை கலைத்தார்
"ஒன்னும் இல்லப்பா "
"நான் கேட்டதுக்கு பதிலை காணும்"
" சரி வர சொல்லுங்க "என்றாள் மகள் கூறியதில் மகிழ்ச்சி அடைந்தாலும் அவள் உடனே சம்மதம் கூறியது அவருக்கு என்னோ காலக்கமாகவே தோன்றியது என்ன தடை வந்தாலும் இந்த வருடம் முடியும் முன்பு மிருதுளாவுக்கு திருமணத்தை நடத்தியாக வேண்டும் என்று முடிவுடன் இருந்தார்.

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now