காலை எழுந்ததும் குளித்து விட்டு கீழே சென்றாள் மிருதுளா
"அம்மா ரொம்ப பசிக்கிறது"என்று குறிக்கொண்டு சாப்பாடு மேஜையில் அமர்ந்தாள்
"இதோவர"என்று குறிக்கொண்டு இரண்டு பூரியை பரிமாறினார்
"அம்மா என்ன ரெண்டுதா வைக்கிற இன்னும் ரெண்டு வை உன்னோட இந்த பூரி கிழங்க ரொம்ப மிஸ் பண்ண "
"இப்படியே எவ்ளோ நாள் சொல்லப்போற...நீ இன்னொரு வீட்டுக்கு போய் எனக்கு எப்போ செஞ்சுதர போற"என்றார் மஞ்சு.
"மா ப்ளீஸ் காலங்காதால ஆரம்பிக்காத "என்றாள்
"என்ன ஆரம்பிக்காத எப்படியும் நீ இன்னொரு வீட்டுக்கு போகத்தான போற"என்றார்
"மா இப்படி பேசிட்டு இருந்த நான் எந்திரிச்சி போய்டுவே "என்றாள்
"சரி சரி எதுவும் பேசல சாப்பிடு" என்றார் மஞ்சு.
அந்த நேரம் மோகன் அலுவலகம் செல்ல தயாராக வந்தான்
"மா எனக்கு டைமாச்சு நா ஆபீஸ் போய்
சாப்பிடுகிறேன் "என்றான்
"சரி போறப்போ நிச்சய போடவையோட சட்டைய கீர்த்தி வீட்டுல தந்துட்டு போயிடு "என்றார்
"மா எனக்கு டைமாகுது வேணும்னா மிருதுளாட குடுத்து விடுமா "என்று கூறிவிட்டு சென்று விட்டான்
"அட பாவி என்ன ஏன்டா கொத்துவிட்ட "என்று மனதில் அவனுக்கு அர்ச்சனை சேதுவிட்டு "மா என்னால போகமுடியாது...நா வெளிய போற எனக்கு வேற வேலை இருக்கு "என்றாள்
"இங்க பாரு உனக்கு என்ன வேலை இருந்தாலும் இத குடுத்துட்டு போயிடு ....ப்ளீஸ் என்னோட செல்லம் "என்றார்
"சரி சரி போற என்று சலித்து கொண்டு "
கிளம்பினாள்கீர்த்தியின் வீட்டு முகவரி வாங்கிக்கொண்டு வீட்டை அடைந்தாள் ...
கீர்த்தியின் வீடை கண்டு அதிர்ந்து நோக்கினாள்
கீர்த்தியின் வீட்டில் பாதி அளவுகூட இருக்காது மிருதுளாவின் வீடு" இவ்ளோ வசதியான வீட்ட விட்டு நம்ம வீட்டுல கீர்த்தியால வந்து சந்தோஷமா இருக்க முடியுமா....மோகனால அவள சந்தோஷமா வச்சுக்க முடியுமா "என்று பல கேள்விகள் அவளுள் எழுந்தது
அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு வீட்டின் காவலாளியிடம் தான் யாரென கூறிக்கொண்டு வீட்டினுல் சென்றாள்
"வா வா மிருதுளா "என்று புன்னகையுடன் வரவேறார் கீர்த்தயின் அன்னை கிருஷ்ணவேணி
"வணக்கம் ஆண்ட்டி "
"என்னமா ஆண்ட்டின்னு கூப்பிடுற அழகா அத்தைனு சொல்லு "என்றார்
சரி ஆண்ட்டி இல்ல அத்தை "என்றாள் மிருதுளா
YOU ARE READING
உள்ளத்தில் உன்னை வைத்தேன்
Romanceதன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.