14

22 1 0
                                    

மித்ரா வீட்டிற்கு சென்றுவுடன் I reached home-னு Msg அனுப்பிவிட்டு refresh ஆகி வந்து பாட்டியுடன் கொஞ்ச நேரம் Business விஷயமாக பேசிவிட்டு மற்ற விஷயங்களைப் பற்றியும் பேச ... மங்கை உன்கிட்ட ஒன்னு சொல்லணும் டா. உன்னோட ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காட்டினேன். குருபலன் வந்திருக்குன்னு சொன்னாரு. அதான் உனக்கு கல்யாணம் பண்ணலாம் அப்படின்னு முடிவெடுத்து இருக்கேன். ஒரு நல்ல வரன் வந்து இருக்கு. நீ என்னம்மா சொல்ற பார்க்கலாமா என்று கூறிவிட்டு மித்ரா முகத்தை ஆராய கல்யாணம் என்றவுடன் பிரித்திவியின் முகம் மனக்கண்ணில் வர.. இப்பவே எதுக்கு பாட்டி இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே. .... இல்லடா ராசாத்தி எனக்கும் வயசு ஆகுது. உனக்கு நல்லது பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு. யோசிச்சு நல்ல முடிவா சொல்லுமா. இப்ப வா சாப்பிடலாம்.

இரவு உணவை உட்கொள்ளும் போது பாட்டி பேசியதையும் பிரித்திவி முகத்தையும் மாரி மாரி யோசித்து சப்பாத்தியை பிட்டு பிட்டு வைத்து சாப்பிடாம யோசிக்க பாட்டி.. ராசாத்தி சாப்பிடும் பொருளை அலக்கக்கூடாது. ஒழுங்கா சாப்பிடு என்று அதட்ட வேகமாக சாப்பிட்டு தன் அறைக்கு செல்கிறாள்.

மித்ரா போனவுடன் பாட்டி சுவாமிநாதன் தாத்தாக்கு அழைத்து .. ஹலோ நாதன், என்ன பண்ற சாப்பிட்டியா.... சாப்பிட்டேன் நீ சாப்டியா. இப்பதான் மாத்திரை போட்டு படுக்க ரெடி ஆயிட்டு இருக்கேன். .... நானும் சாப்பிட்டேன். நம்ம பிளான் கரெக்டா ஒர்க் ஆகுதுனு நினைக்கிறேன். கல்யாணமுனு சொன்னவுடனே ஒரு நிமிஷம் அவ Reaction எப்படி இருந்துச்சுன்னா Freeze ஆகிட்டு Dream-ல யாரையோ பாத்துட்டு வந்த மாதிரி அப்புறம் இப்பவே எதுக்குன்னு சாக்கு சொல்லிட்டு போறா. கண்டிப்பா நாம நெனைச்சது நடக்கும் நினைக்கிறேன் ....

இங்கேயும் அதே கதைதான் மித்ராக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு சொன்னவுடனே முகத்தை அஷ்ட கோணலாக்கி என்கிட்ட சொல்லவே இல்ல அவ , கண்டிப்பா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவா அப்படின்னு சொல்லிட்டு இருந்தான். கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் எதிர்பார்க்கலாம். நானும் மகேந்திரன் மஞ்சுளா கிட்டயும் பேசிட்டு நாளைக்கு அவன் ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு சொல்றேன் .... அப்ப Ok gd night.... gd night-னு போன் வெச்சிருக்காங்க.

மித்ரா தன் ரூமுக்கு வந்தத்திலிருந்து யோசித்துக் கொண்டே இருந்தாள். என்ன இது கல்யாணம் சொன்னான்னவுடனே அவன் முகம் நினைப்புல வருது. அந்த அளவு என் மனசுல அவன் பதிந்துவிட்டனா. கரெக்டா அந்த நேரம் பிரித்திவி Call பண்றான். .....

ஹலோ .. என்னடி பண்ற சாப்டியா. .... சாப்பிட்டேன் டா அப்படின்னு குழப்பத்துடனே பதில் சொல்றா ... Mobile-ஐ காதில் இருந்து எடுத்து பார்த்து என்ன இவ Voice-ஏ சரி இல்ல. பாட்டி வரன் வந்திருக்கு சொல்லிட்டு மாப்பிள போட்டோ காமிச்சாங்கலோ. அவளே சொல்லுவா Wait பண்ணு அப்படின்னு மனசு உள்ளிருந்து சொல்ல ..... அதுக்குள் அவன் குரல் கேட்டு மனசு அமைதி அடைவது போல் தோன்ற ரித்தி-னு என்ற செல்லப் பெயரை மௌனமாக முணுமுணுத்தாள். .....

என்னமோ சொல்கிறாள் என்று தோன்ற என்ன சொன்ன மித்ரா சரியா கவனிக்கல என்று மறுபடியும் கேட்க ..... அது பாட்டி வந்து ஒன்னு சொன்னாங்க. அதப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். ..... என்ன சொல்லியிருப்பாங்க என்று தெரிந்து கொண்டே தெரியாததுபோல் என்ன சொன்னாங்க என்று கேட்டான் ..... இல்ல எனக்கு ஏதோ வரன் வந்திருக்குன்னு சொன்னாங்க. ..... நீ என்ன சொன்ன அதுக்கு ..... நான் அதுக்குள்ள என்ன அவசரம் கேட்டேன். ஆனா பாட்டி சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ற முடிவோடு இருக்காங்க போல. யோசிச்சு பதில் சொல்ல சொல்லி இருக்காங்க. ..... Ohhhhh..நீ என்ன முடிவு எடுக்கப் போற .....

தெரியல .. குழப்பமா இருக்கு .. மனசு வேற ஏதோ எதிர்பார்க்கிற மாதிரி தோணுது .. ...... இப்ப இத பத்தி யோசிக்காம நிம்மதியா படுத்து தூங்கு. குழப்பமா இருக்கும் போது எந்த முடிவும் எடுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. தூங்கி எழுந்த அதற்கப்புறம் யோசிச்சு பாரு. சரியா. இப்ப போய் தூங்கு. Gd night. .... ok.gd night என்று சொல்லிவிட்டு Call கட் செய்யப்பட்டது.

அவளை தூங்கச் சொல்லி விட்டு இவன் இங்க தூங்காம அவ என்ன விட்டு போய்விடக்கூடாது என் கூடவே இருக்கனும் தோணுது.  இதுக்கு என்ன அர்த்தம் புரிய சந்தோஷமாக புன்னகைத்துக் கொண்டான். விஷ்வா இத பத்தி தான் சொல்லியிருப்பான் போல.  இதப்பத்தி நாளைக்கே அவ கிட்ட பேசணும். அவ என்ன முடிவெடுக்கப் போராலோ. அவளை  Park-ல மீட் பண்ண சொல்லி Msg பண்ணிவிட்டு கனவுகளோடு தூங்க சென்றான்.

Msg tone கேட்டு Mobile எடுத்து பார்க்க I want to say something important. Meet me in park tomorrow at 6.00 a.m. I ll be waiting for u. Come soon. அப்படின்னு வந்திருந்தது. என்ன இது இவ்வளோ காலையிலேயே மீட் பண்ண சொல்லி இருக்கான். எனக்கு தோன்றின மாதிரி அவனுக்கும்?..... I ll be there-னு Reply அனுப்பிவிட்டு கனவுகளோடு தூங்கிவிட்டாள்.

யாரோ கூடவே வருவார் Where stories live. Discover now