மித்ராவுக்கு மனதில் எந்த பாரமும் கவலையுமின்றி தனது கம்பெனிக்கு அடுத்த நாள் தயாராகி கீழே வரவும் சங்கமித்ரா பாட்டி பூஜை அறையில் இருந்து வெளிவரவும் சரியாக இருந்தது. பாட்டிக்காக பாட்டியுடன் சேர்ந்து சாமி கும்பிட்டு சாப்பிட்டு Office கிளம்பிச் சென்றாள்.
சுவாமிநாதன் தாத்தா மித்ரா வீட்டிற்கு வந்தார்.... என்ன சங்கா இப்ப உனக்கு எந்த கவலையும் இல்ல அசோகன் மித்ரா பத்தி..... அந்தக் கவலை போச்சு ஆனா இப்போ என்னோட கவலையே வேற நாதன் .... அப்படி என்ன கவலை உனக்கு ... எல்லாம் நம்ம மித்ராக்கு கல்யாணம் பண்றது பத்தி தான்.... இதுல கவலைப்படுவதற்கு என்ன இருக்கு..... நல்ல பையனா நல்ல குடும்பமா இருக்கணும். நல்ல மனிதர்களா இருந்தா போதும்.....நமக்கு தெரிஞ்சவங்க மூலமா பாக்கலாம் அப்படி இல்லன்னா Matrimonial siteல பாக்கலாம்...... அதைவிட முக்கியமா மித்ராகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும்.....
First அவகிட்ட எந்த மாதிரி பையன் பிடிக்கும் அப்படின்னு கேளு. அவளுக்குனு ஏதேனும் ஆசை இருக்கும்..... நீ சொல்றதும் சரிதான் அவகிட்ட கேட்கிறேன். அப்புறமா மாப்பிள பாக்கலாம்.
ஆமா நீ பிரித்திவிக்கு பொண்ணு பாக்கலையா ... நீ வேற அவங்கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினாலே ஓடிரான். அப்பறம் நான் எங்க பேச ... ஏன் அனக்கு இஷ்டம் இல்லையாமா ... அவனுக்கு Love Cum arrange marriage பண்ணனுமா. மொதல்ல Love பண்ணதானே மேரேஜ் பண்றதுக்கு. அவனுக்கு இன்னும் லவே வரலையாம். ...
எனக்கு ஒரு யோசனை தோணுது. பேசாம நாம ஏன் மித்ராக்கும் பிரித்திவிக்கும் Marriage பண்ணக்கூடாது .... நீ சொல்றதும் நல்ல யோசனையா தான் இருக்கு. ஆனா அவங்க என்ன நினைப்புல இருக்காங்கன்னு தெரிஞ்சிட்டு முடிவு பண்ணாலாம்.
இங்கே பாட்டியும் தாத்தாவும் இவர்களுக்கு கால்கட்டு போட யோசிக்க அங்கே Officeயில் மித்ரா பிரித்திவி மீது கடும் கோபத்தில் இருக்கா.
முந்தினம் தனக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்புவதாக இருந்ததை பாட்டியிடம் பேசி தனக்கு யாரும் bodyguard ஆக வரவேண்டாம் என்று கண்டிப்பாக கூறியிருந்தாள். அதனால் பாட்டியும் பிரித்திவியுடன் கூறி Security இப்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அன்று மித்ரா தனியாகத்தான் OffIce- க்கு வந்தாள். பிரித்திவி அவளுடன் வரவில்லை. அவளுக்கு தகவலும் தரவில்லை. Friendsஆ நல்லா பேசிட்டு இன்னைக்கு Bodyguard வேண்டாம் அப்படின்னு பாட்டிகிட்ட சொல்லி சொன்னதுக்கு ஒரு Reactionனும் இல்ல. ஒரு Msg இல்ல ஒரு Call இல்ல Officeக்கு பத்திரமா போய் சேர்ந்தனா எதுவும் கேக்கல. அப்படின்னா இத்தனை நாள் பாட்டிக்காக தான் எனக்கு பாதுகாப்பு கொடுத்தானா பிரண்டா இல்லையா அப்படின்னு பிரித்திவி மேல செம கோபத்தில் இருந்தாள்.
தனக்கே தெரியாமல் பிரித்திவி மேல் அவளுக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாய் இருந்ததை அவளே உணரவில்லை
ESTÁS LEYENDO
யாரோ கூடவே வருவார்
De TodoI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க