Lifeline hospital -ல் மித்ரா ICU வில் அனுமதிக்கப்பட்ட இருந்தாள். மங்கையர்க்கரசி பாட்டி விவரம் அறிந்து வேகமாக வந்து சேர்ந்தார். Treatment நடந்து கொண்டிருப்பதால் வெயிட் செய்து கொண்டிருந்தார் . சுவாமிநாதன் தாத்தா விஷயமறிந்த அங்கு வந்து சேர்ந்தார்.
பா - பாரு நாதன் என் பேத்தி எப்படி அடிபட்டு கிடைக்கா. அந்த அசோகன் தான் இதுக்கெல்லாம் காரணம். அவனைச் சும்மா விடக்கூடாது.
சு.தா - அதையெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இப்போ மித்ரா பத்தி டாக்டர் என்ன சொன்னாங்க.
பா - இன்னும் டாக்டர் உள்ள இருந்து வெளிய வரலடாக்டர் வெளியே வந்து கவலைப்படும் படி ஒன்னும் இல்ல. கைல கால்ல தான் எலும்பு முறிவு இருக்கு. அப்புறம் MRI Scan எடுத்துப் பார்த்துட்டோம் Brain-கு எந்த டேமேஜ் இல்ல. Full body check up பண்ணிட்டோம். ஒரு 2 or 3 weeks rest எடுத்தா போதும் நல்லா ஆயிடுவாங்க. Tablets நேரத்துக்கு எடுத்துக்கணும். நல்ல சத்தான ஆகாரமும் சாப்பிடணும்.3 days-ல
Discharge பண்ணிடலாம்.நார்மல் ரூமிற்கு மாற்றப்பட்ட மித்ரா மருந்தினால் நல்ல உறக்கத்தில் இருந்தாள். பாட்டி அவளைப் பார்த்து அழுதுவிட்டு வெளியே வந்து அமர சுவாமிநாதன் தாத்தா அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.
நல்லவேளை மித்ராவுக்கு ஒன்னும் ஆகல. நீ கவலைப்படாம இரு. அப்புறம் உனக்கும் உடம்பு சரியில்லாம ஆகப்போகுது பாத்துக்கோ.
இல்ல நாதன் அந்த அசோகன ஏதாச்சு பண்ணாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும். மாதவனை ஏமாத்தி பொய் கணக்கு காமிச்சி நம்ம பணத்த அவன் பேருக்கு மாத்தின அப்பவே அவனை ஏதாச்சு பண்ணியிருக்கணும் ஆனா மாதவன் வேணாம்னு விட்டுட்டான் எதுக்கு சண்டை நம்மகிட்ட இருக்கிறது வெச்சு முன்னுக்கு வந்துடலாம் அப்படின்னு இட்டான். ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் அவன் அடங்கின பாடில்லை. இப்ப மட்டும் மாதவன் உயிரோடு இருந்திருந்தா தன் பொண்ணு கிட்ட மோதிர அந்த அசோகன் சும்மா விட்டு இருக்கமாட்டான். அவனுக்கு இருக்கு இனி. இத்தனை நாள் அந்த தேன்மொழி பிள்ளைக்காக இவனை சும்மா விட்டா இவன் நம்பர் மித்ராவை அழிக்க நினைக்கிறான். இனி சும்மா இருந்தா அர்த்தமில்லை.
சரி அவன பத்தி அப்புறம் பேசிக்கலாம்.
அதுவும் சரிதான். பஸ்ட் மித்ராவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணனும். Bodyguards ஏற்பாடு பண்றேன்னு நான் பஸ்டே சொன்னேன் அவதான் கேக்கல. இனி அப்படி விட முடியாது.
என் பேரன் கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ண சொல்லவா.
இல்ல ராஜா கிட்ட நானே பேசறேன்.மேலும் சில நாட்கள் Hospital -ல் இருந்து வீட்டுக்கு வந்தாள் மித்ரா. அவள் நன்றாக ஓய்வெடுக்க பாட்டி கம்பெனியை பார்த்துக்கொண்டார். மித்ரா தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியும் கேட்காமல் 'உன் தாத்தா கூட இருந்து இந்த கம்பெனியை நான்தான் நிறுவாகம் பண்ணேன். ஏதோ உன் அப்பா பொறுப்பு ஏத்துகிட்ட அப்புறம்தான் நான் அமைதியானேன். அப்பவும் என் கிட்ட கேட்டு தான் அவன் சில முடிவு எடுப்பான். இந்த அசோகன் விஷயத்தில்தான் என்கிட்ட கேட்காம தப்பு பண்ணிட்டான். சரி அதை பத்தி விடு. இப்பவும் என்னால கம்பெனிய பாத்துக்க முடியும் ' அப்படின்னு சொல்லிட்டாங்க.
சில வாரங்கள் கழித்து மித்ரா கம்பெனிக்கு செல்வதாக முடிவெடுக்க பாட்டி Bodyguard பத்தி சொல்லி அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார். வெளியே அவளுக்காக காத்திருந்த பிரித்திவி என்னும் பிரித்திவிராஜ் உடன் பயணிக்கிறாள்.
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க