15

11 0 0
                                    

அடுத்த நாள் காலை மித்ரா Park-க்கு 5.45 மணிக்குச் செல்ல அவளுக்கு முன்பாகவே பிரித்திவி வந்துகாத்திருந்தான். Gd mng என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டபின் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று அவனும் , என்ன சொல்லுவானோ என்று ஆவலுடன் அவளும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கதான் வர சொன்னியா என்று அவளே பேச்சை ஆரம்பிக்க .... இப்படியே பார்த்துட்டு இருந்தாலும் எனக்கு ஓகே தான் என்று மெல்லமாக அவன் முனுமுனுக்க .. சத்தமில்லாத பொழுது என்பதால் அவளுக்கும் கேட்டுவிட வெட்கம் வந்தது அவளின் முகத்தில். ...

அவளின் வெட்கத்தை கொண்டே அவளின் மனதை அறிந்துகொண்ட அந்தக் காதலன் ... சுத்தி வளைக்காமல் நேராக தன் மனதில் இருப்பதை கூற ஆரம்பிக்கிறான். ... மித்ரா உன்கூட பேசும்போது உன்கூட  இருக்கும் போது மனசுக்கு நிம்மதியா இருக்கு.

என் உணர்வுகளை நான் சொல்லாமே நீ புரிஞ்சுக்கற. இப்ப கூட பாரு நான் என்ன சொல்ல வந்து இருப்பேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். அது எனக்கு தெரியும் நீ வெளியே சொல்லனாலும்.
ஆனாலும் நான் எனக்கு தோணினதை சொல்றேன்.

மத்த ஃப்ரெண்ட்ஸ் போலத்தான் உன் கூடவும் பழகினேனு  நினைச்சன். ஆனா என்னை அறியாமையே உன் மேல உரிமை உணர்வு தோணுச்சு போல. மாப்பிள பாக்குறாங்கனு தாத்தா சொன்னதிலிருந்து எங்க நீ என்னைவிட்டு போடுவியானு நினைப்பே பதறவைக்குது.

எப்பவும் உன் கூடவே இருக்கணும் உன்னை பத்திரமா  பாத்துக்கணும் இப்படி எல்லாம் தோனுது. இதுக்கு பேர்தான் காதல்னா நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூற மித்ராவும் தன் மனதில் இருப்பதை கூறுகிறாள்.

நான் அம்மா அப்பா கூட ரொம்ப கிளோஸ். ப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுவோம். அவங்க  இறந்த அப்பறம் நான் யார்கிட்டையும் அவ்வளவு Close-ஆ பழகல பாட்டிய தவிர. பிரெண்ட்ஸ் அவ்வளவா இல்ல. நீ என் Friend ஆன அப்பறம் உன்கூட Time spend பண்றது பிடிச்சுது. பாதுக்காப்பு உணர்வையும் கொடுத்திது. ஆனா எப்போ பாட்டி கல்யாணமுனு சொன்னாங்களோ உன் முகம் தான் மனசுல வந்திச்சு. அந்தளவுக்கு நீ என் மனசுக்குள் வந்திட்டனு புரிஞ்சிகிட்டேன்.  நானும் உன்னை காதலிக்கிறேன் என்று கூறிவிட்டாள்.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிவிட்டு வீட்டிற்கு செல்கின்றனர்.

அன்றும் அதுக்கு அடுத்து சில நாட்கள் அவரவர் வேலைகளில் Busy-ஆக இருந்தாலும் அடிக்கடி Msg Call செய்து Daily evening park-யில் சந்தித்து  பேசிக்கொண்டிருந்தனர்.

யாரோ கூடவே வருவார் Donde viven las historias. Descúbrelo ahora