6

28 1 0
                                    

அசோகன் தன் தவறுகளை நினைத்து தன்னை நிந்தித்து கொண்டிருந்தார். தன் மகனை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். அரவிந்த் உனக்கு எதுவும் ஆகாது நான் ஆகவும் விடமாட்டேன். நான் செஞ்ச பாவம் தான் உனக்கு இப்படி ஆச்சுன்னு உங்க அம்மா சொல்ற சோ கண்டிப்பா எல்லாத்தையும் சரி பண்ண போறேன் அதுக்கு நீயும் எனக்குத் துணையா இருக்கணும் டா. எழுந்து ஆரோக்கியமா வாடா எனக்கு அது போதும் மிச்சத்தை நான் பாத்துக்குறேன் அப்படின்னு தன் மகனின் அருகில் அமர்ந்துகொண்டு தன் உள்ளத்தை கூறிக்கொண்டிருந்தார். தேன்மொழி கதவின் அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார். இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்றறிந்து கடவுளுக்கு மனதிற்குள் நன்றி கூறிக்கொண்டு இருந்தார்.

       ஒரு வாரம் கழித்து அசோகன் தேன்மொழியுடன் மித்ராவின் வீட்டுக்கு செல்கிறார். சங்கமித்ரா பாட்டி கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு கேட்கிறார். மாதவன் என்னை நல்ல பிரண்டா தான் நினைச்சான் ஆனா நான்தான் அவனை ஏமாத்தி Shares எல்லாம் என் பேர்ல மாத்திக்கிட்டேன். இது தெரிஞ்சும் என்னை எதுவும் சொல்லாம பண்ணாம விட்டுட்டான். அந்த நல்ல மனசையும் அவனோட கையாலாகாத தனம் நெனச்சுக்கிட்டேன். அவன் மட்டும் நினைச்சிருந்தா அன்னிக்கே என்கிட்ட இருந்து Shares திரும்ப வாங்கினது இல்லாம என்னை மொத்தமா அழிச்சு வளரவிடாமல் செஞ்சுக்கலாம் ஆனா அவன் அதை பண்ணல. ஆனா நானோ மாதவன் பொண்ணுக்கு கஷ்டத்தை கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா இப்பயும் தேன்மொழி phone பண்ணி அழைத்தவுடன் அவகூட ஆஸ்பிட்டல் இருந்தீங்க. என்னை மன்னிச்சிருங்க அப்படின்னு தன் தவறுகளை சொல்லி ஷேர்ஸ் பத்திரத்தை கொடுக்கிறார்.

        இவ்வளவு நேரம் பாட்டி அருகில் அமைதியாக இருந்த மித்ரா ஷேர்ஸ் பத்திரத்தை அவரிடமே கொடுத்து அப்பாவே உங்ககிட்ட இருந்த திரும்பி வாங்க விருப்பப் படாத Shares எங்களுக்கு வேண்டாம். இத நீங்களே வெச்சுக்கோங்க. இனிமேலாச்சும் யாருக்கும் நம்பிக்கை துரோகம் பண்ணாதீங்க. அதுவே போதும் அப்படின்னு அங்க இருந்து போயிட்டா.

         சங்கமித்ரா பாட்டி தன் பேத்தியை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார். அசோகனிடம் எங்களுக்கு இருக்க சொத்துக்கு நீ மாதவன ஏமாத்தி உன் பேருக்கு எழுதி வைத்த சொத்து ஒரு பொருட்டில்லை அதனால அதை நீயே வச்சுக்கோ. ஆனா இனி மித்ரா விஷயத்துல தலையிட்டனா எங்களோட பலத்த பார்க்க வேண்டியிருக்கும்..... இல்லமா இனி மித்ரா விஷயத்துல என்னோட இடைஞ்சல் எதுவும் இருக்காது அப்படின்னு ப்ரம்ஸ் பண்றாரு. அப்புறம் அரவிந்த் பத்தி கொஞ்ச நேரம் பேசிட்டு போறாங்க.

யாரோ கூடவே வருவார் Where stories live. Discover now