வெள்ளிக்கிழமை பாட்டியின் பிறந்தநாள் அன்று காலையில் மித்ராவும் பாட்டியும் கோவிலுக்கு செல்ல அங்கே சுவாமிநாதன் தாத்தாவும் பிரித்திவியும் அவன் பெற்றோர்களும் வந்திருந்தனர். ஒருவர்க்கொருவர் நலம் விசாரித்துவிட்டு அனைவரும் கடவுளை வணங்க வரிசையில் நிற்க பிரித்திவி மித்ரா ஜோடியாக தள்ளப்பட்டனர். தற்செயலாக வந்ததுபோல் இருந்தாலும் அது ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டது என்று சிறியவர்கள் அறியவில்லை.
சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது இருவரும் ஜோடியாக சுற்றிவர அதைப்பார்த்த பெரியவர்களுக்கு தங்கள் திட்டம் வெற்றி பெற்று விட்டது என்று தெரிந்து கொண்டனர்.
பிரசாதத்தை வாங்கி ஓரிடத்தில் அனைவரும் அமர காதலர்கள் ஒன்றாக அமர்ந்தனர். என்னம்மா மித்ரா கல்யாணத்த பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க என பாட்டி கேட்க மித்ராவும் பிரித்திவியும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இருவரும் கையை கோர்த்துக்கொண்டு தாங்கள் காதலிப்பதாக தைரியமாக பெரியவர்களிடம் கூறுகின்றனர்.
அதைக்கேட்டு பெரியவர்கள் மிகவும் சந்தோஷப்பட விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க நல்ல நாள் பார்க்க பிரித்திவியின் பெற்றோர் ஐயரை காண சென்றுவிட்டனர். அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பி அவரவர் வேலைகளில் Busy ஆக இருந்தாலும் திருமண வேலைகளையும் சேர்த்து பார்த்துக்கொண்டனர்.
நம் காதல் ஜோடியும் அவர்களின் Company வேலைகளோடு தங்கள் காதலையும் சேர்த்து வளர்த்தனர்.
நிச்சயதார்த்தமும் கல்யாணமும் அடுத்தடுத்த நாளில் முடிவு செய்யப்பட்டிருக்க இருவர் வீட்டிலும் கல்யாண களைகட்டியது.நண்பர்களுக்கு கல்யாண விஷயம் அறிந்து மகிழுந்து இருவரையும் கலாய்த்தனர் .. ஆகாஷ் தன் நண்பனிடம் நாங்க அப்பவே எதிர்பார்த்தோம். நீங்கதான் லேட் என்று கூறி கிண்டல் செய்து கொண்டிருந்தனர். Treat கேட்க வைத்துவிட்டு கல்யாண நாளுக்காக காத்திருந்தனர்.
தற்போதுள்ள Trend-படி கல்யாணத்துக்கு முன்னாடியே Phootshoot எடுத்துக்கொண்டனர். அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களுடன் முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிகளுடன்
திருமணம் இனிதே நடந்தேறியது.மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அனுப்பும் நேரம் பாட்டியும் பேத்தியும் உடைந்து அழுது விட்டனர். அனைவரும் ஒருவிதமாக சமாதானப்படுத்த அமைதியாக மித்ரா பாட்டியிடம் Daily நம்ம வீட்டுக்கு வருவேன். வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடணும். மாத்திரை எல்லாம் கரெக்டா டைமுக்கு எடுக்கணும் என்று சொல்ல பாட்டி சிரித்துவிட்டார். ....
அடியேய் நான் உனக்கு பாட்டி நீ எனக்கு இல்ல. இப்படி அட்வைஸ் பண்ற என்று கூற அனைவரும் சிரித்து விட்டனர். போங்க பாட்டி நீங்க என்று சிணுங்கி தன் கணவனின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
பாட்டி பிரித்திவியிடம் அவ அம்மா அப்பா போன பின்னாடி ரொம்ப சைலன்ட் ஆயிட்டா. ஆனால் அவளுடைய இயல்பு நீ வந்தப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்கு. அவள பழையபடி சந்தோஷமா உன்னால தான் மாத்த முடியும் அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு டா கண்ணா. ...
நீங்க கவலைப்படாதீங்க பாட்டி. மித்ராவுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கிறேன் சொல்லமாட்டேன். எல்லா இன்பத்திலும் கஷ்டம் நஷ்டத்திலையும் அவ கூட இருந்து வாழ்க்கையே சந்தோஷமா வாழ்வோம். மித்ராவுடைய மகிழ்ச்சிக்கு நான் கேரன்டி என்று விளம்பர பாணியில் கூறி பாட்டியை இயல்பாக்கினான்.
நல்ல நேரத்தில் பிரித்திவி ராஜ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள் மித்ர மங்கை.
மித்ராவின் பாதுகாப்புக்காக துணையாக கூடவே இருப்பான் என்று நினைத்த பிரித்திவி வாழ்க்கைத் துணையாக காலம் முழுவதும் கூடவே வருவான் என்ற விதியின் விளையாட்டை யார் (A/n: என்னைத்தவிர)அறிவார்.
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க