அருண் சென்றவுடன் பிரித்திவி மித்ராவிடமம் அவர் அஷோக்கண்ணுடைய ஆள்ணு தோணுது. சோ எச்சரிக்கையா இந்த Contractஐ முடிக்க பாருங்க.....
இது எனக்கு பஸ்டேவே தெரியும் ஆனா என்ன பண்றது அக்ரிமெண்ட் போட்டாச்சு வேலைய முடிச்சு கொடுத்துதான் ஆகணும். அவர் இந்த Changesஐ வேணுமென்றே கூறுகிறார் என்று தெரியும். ஆனா இதுக்கெல்லாம் நான் கவலைப்பட்டிருக்க முடியாது. Due dateகுள்ள எல்லாம் முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்கணும்.
சரி உங்களுக்கு ரூம் அரேஞ்ச் பண்ண சொல்லியிருக்கேன் அது வரைக்கும் என் கேபின்ல வெயிட் பண்ணுங்க அப்படின்னு கூட்டிட்டு போறா.
இப்படியாக பிரித்திவி மித்ரா உடன் இருந்தான்.மாலை வேலை முடிந்தவுடன் இருவரும் ஒன்றாக மித்ரா வீட்டுக்கு செல்ல அங்கே பாட்டி அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.
மித்ரா எங்க போறீங்க பாட்டி உடம்புக்கு முடியலையா ... ஒன்னுமில்லடா வந்து சொல்றேன் .... இல்ல பாட்டி நானும் கூட வாரேன் ..... சொன்னா கேளு மித்ரா. நான் சுவாமிநாதன் கூடத்தான் இருப்பேன். உனக்கு அப்புறம் கால் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.Lifeline hospitalலில் சங்கமித்ரா பாட்டியும் சுவாமிநாதன் தாத்தாவும் தேன்மொழியை ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தனர். தைரியமா இருக்கணும். நீயே பயந்தா எப்படி .... இல்லம்மா அரவிந்த் எப்பயும் ஆரோக்கியமா தான் இருந்தான் ஆனா அவனுக்கு இப்படி Brain tumor இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. என்னால இவன இப்படி பாக்க முடியல அழறாங்க .... அவனுக்கு எதுவும் ஆகாது. நல்லபடியா குணமாகி வருவான் பாரு.
சரி உன் புருஷன் எங்க.... அவரப் பத்தி பேசாதீங்க மா. நம்ம மித்ராவை ஏதோ பண்ண பாக்குறாங்க அப்படின்னு நான் உங்ககிட்ட சொன்னதே தெரிஞ்சுகிட்டு என் கிட்ட சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டுப் போய் Guest houseல குடிச்சிட்டு இருக்காரு. Phone பண்ணா கூட எடுக்கல .... அதுக்குன்னு அப்படியே விடுவியா. பையனுக்கு இப்படி இருக்குனு தகவல் சொல்லி அனுப்பு அசோகன் கண்டிப்பா வருவான் .... சரிம்மா. இந்த நேரம் யார உதவிக்குக் கூப்பிடறது தெரியாம உங்களுக்கு கால் பண்ணிட்டேன். இந்நேரம் மித்ரா கூட இருந்திருப்பீங்க என்னை மன்னிச்சிடுங்க ...
என்ன நீ இப்படி பேசுற நான் உனக்கு அம்மா மாதிரி தானே நான் வராமல் வேற யாரு வருவாங்க. எதையும் நினைச்சுட்டு குழம்பாமல் இந்த Tea குடி.
அதற்குள் டாக்டரும் வந்து இது Starting stage என்றதால Tabletsல குணப்படுத்தலாம். இனி கொஞ்ச காலம் Exercise diet எல்லாம் Follow பண்ணனும். ரெண்டு வாரம் கழிச்சு MRI scan எடுத்துப் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு பாக்கலாம். அதற்குள் அசோகன் வந்துவிட பாட்டியும் சுவாமிநாதன் தாத்தாவும் தேன்மொழியிடம் கூறிவிட்டு கிளம்பி விட்டனர்.
தேன்மொழி அசோக்கின் இடம் நீங்க பண்றது எல்லாம் திரும்பி நம்பளுக்கு தான் வரும். நீங்க மித்ராவுக்கு கெட்டது செய்யணும்னு நினைக்கிறீங்க அது திரும்பி நம்ம பையனுக்கு தான் வந்திருக்கு. எப்பவுமே நல்லதை நினைச்சா தான் நல்லது நடக்கும். அடுத்தவங்கள அழிக்கணும் அடுத்தவன் சொத்தை சொந்தமாக்கிக் நெனச்சா இப்படித்தான் நடக்கும். பையனுக்காக தான் அமைதியா இருக்கேன் இல்லனா எப்பவோ உங்களைவிட்டு பிரிஞ்சி போயிருப்பேன். அசோகன் முதல்முறையாக தன் தவறுகளை எண்ணி மனம் வருந்துகிறான். மாதவனிடம் இருந்து தன் பெயருக்கு மாற்றிய பங்குகளை திரும்பி சங்கமித்ரா பாட்டியிடம் ஒப்படைக்க எண்ணுகிறான்.
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க