கண்ணமாவின் காதலன் -2

1.3K 40 6
                                    

2016,மே மாதம்

விடியற்காலை 4 மணி

சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் அந்த பெரிய வீட்டில் சிலர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்."இங்க பாருங்கடா பொருளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது, இன்னும் 2 மணிநேரத்தில் சென்னையை தாண்டி இருக்கணும்.,இதில் எந்த தப்பும் நடக்கக்கூடாது,அப்படி எதாவது நடந்தா உங்களை தொலச்சிடுவேன்"என்று மிரட்டினான் அந்த கூட்டத்தின் தலைவன் ராஜேஷ்

அரைமணி நேரம் கடந்திருக்கும், " அண்ணா எல்லாம் தயார் நாம கிளம்பிலாம்" என்று ஒருவன் சொல்ல, அதற்கு ராஜேஷோ "டே ஐட்டமெல்லாம் ரெடியா இருக்கு தானே,நாம் ரீச் ஆகற நேரம் ஜாக்சன் அங்க இருக்கணும்"என்று பேசிக் கொண்டே செல்ல....

தீடிரென்று தூப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது, மறுபக்கம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது"பாஸ்கரா எங்கடா இருக்க??என்ன சத்தம் டா,டே கரண்ட் போயிடுச்சு.....வேலு, ரஞ்சித்,மணி எங்கயா இருக்கீங்க,பேசுங்க டா" என்று ராஜேஷ் கத்த.

"அண்ணா......என்று வேலுவின் குரல் மட்டும் கேட்க....." வேலு....டே டே என்னடா,எங்கயிருக்க,என்று கேட்டுக் கொண்டே ஒரு கையில் துப்பாக்கியும் மற்றொரு கையில் போன் டார்ச்சை எடுக்க, அதற்குள் அவன் கையில் மொபைல் போனை யாரோ தட்டிவிட்டு,அது சிதறி எங்கோ போய் விழுந்தது, அதற்குள் அவன் உஷாராகி தூப்பாக்கியே இறுக்கமாக பற்றிக் கொள்ள, அவனுக்கு சரமாரியாக அடிகள் விழ.அவனும் பதிலுக்கு தாக்கினான்.

கடைசியில் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டதில் ராஜேஷ் சோர்ந்து தான் போனான்‌.. அடுத்த அடியில் அவன் கீழே விழ,அதுவரை அடித்துக் கொண்டிருந்தவன்,அவனை வளைத்து பிடிக்க முயல்,ராஜேஷ் கைக்கு தூப்பாக்கி சிக்க,அதை எடுத்து சுட, எதிரில் இருந்தவனோ 'ஆ ஆ என்று அலறினான்,ஆனால் அடுத்த நிமிடம் பூட்ஸ் காலால் ராஜேஷின் முகத்தை யாரோ உதைக்க.,அதில் நிலைகுலைந்து போனவன்,திரும்பவும் தூப்பாக்கியை‌ எடுக்க, அதற்குள் திரும்ப திரும்ப அடி பலமாக விழ,மயங்கி சரிந்தான் ராஜேஷ்.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Where stories live. Discover now