"இல்ல மச்சான் எனக்கு நம்பிக்கை வந்திடுச்சி,எப்படியாவது இனியா வை சமாதானம் செஞ்சுடுவேன்"என்று அகிலன் சொல்ல
"சரிடா,இந்த முறையாவது எதையும் சொதப்பாமல் செய்,இனியா வை கொஞ்சம் பொறுமையாக அணுகு,மனசு திறந்து பேசு......அவ உனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு புரிய வை,பொண்ணுங்க எதிர்ப்பாரக்கிறது அதுதான்.இனியா நிறைய இழந்திருக்கா,அதனால் அவ கோபப்பட்டா....."என்று யுகா முடிக்கும் முன்பே
"சரிடா உன் தங்கச்சி எவ்வளவு கோபப்பட்டாலும் நான் தாங்கிக்கிறேன் சரியா?? அடிச்சா கூட வாங்கிக்கிறேன் சரியா??ஆனா யுகா, எவ்வளவு மனத்தாங்கல் இருந்த போதும் அவளை ஒருபோதும் வீட்டை விட்டு போன்னு நான் சொன்னது கிடையாது.எனக்கு கண்டிப்பாக அந்த விஷயத்திற்கு பதில் தெரியணும் "என்று அகிலன் மௌனமாக.
"இங்கப்பாரு மச்சி, நமக்கு சின்ன விஷயமா தெரியலாம்,ஆனா அடுத்தவங்களுக்கு அது வேதனை தர விஷயமா இருக்கும் சரியா??இப்போ நமக்கு தேவை இனியா உன்னை ஏத்துக்ணும், பழைய விஷயங்களை தேடிட்டு போறதில் எந்த நல்லதும் இருக்கப் போறதில்லை, கண்முன்னால் இருக்கும் வாழ்க்கையை வாழ பாரு புரியுதா??என்று யுகா தன் நண்பனின் வாழ்க்கையை சரி செய்ய தன்னால் முடிந்தவரை நல்லா வார்த்தைகளாக சொன்னான்.அகிலனும் தன் நண்பனின் வார்த்தைகளை கவனமாக கேட்டுக் கொண்டான்
ஆனால் கர்மா என்று ஒன்று இருக்கிறது அல்லவா?? எதை பற்றியும் யோசிக்காமல் இனியா வை அவன் பேசியதையும்,நடத்தியதை எண்ணியும் அவன் வருந்தி ஆகவேண்டும் தானே💔💔💔💔💔.
அடுத்த நாள் செல்கையில் இனியா வை ஆச்சரியப்படுத்த என்ன செய்வது என்று யோசித்து சில பொருட்களை வாங்கியவன்.வீட்டிற்கு வந்ததும் இனியாவை தேடிச் சென்று அதை கொடுக்கவும் செய்தான்.
வழக்கம்போல எந்த வித சலனமும் இல்லாமல் கையை கட்டிக் கொண்டு இனியா அமைதியாக பார்க்க,"இல்லம்மா உனக்கு Nicolas spark புக்ஸ் பிடிக்கும் அதான்....... என்று இனியாவின் முகம் பார்க்க,அதில் கடினம் குறைந்தது போல தெரியாமல் போக..."ஸாரி இனியா நீ என்னுடைய புத்தக அலமாரியில் ஆசையாக எடுத்து படிக்கும்பொழுது உன்னை திட்டியிருக்கேன்....."என்று மன்னிப்பு கோர.
BINABASA MO ANG
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romanceநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...