கண்ணம்மாவின் காதலன்-22

329 34 10
                                    

அதிகாலை 3 மணி

இவ்வளவு காலையில் யாரது?? என்ன யோசனையோடு எழுந்து சென்று கதவு இடுக்கின் வழியாக பார்க்க,வந்திருந்தது அகிலனே தான்.

இது என்ன விடியற்காலை கனவா??என்ற குழப்பத்தோடு அவனை பார்த்தப்படி நின்றுவிட்டாள் இனியா.

"இனியா.......இனியா கதவை திற"என்று அகிலனின் குரல் கேட்டும் திருதிருவென முழித்தப்படி நின்றிருந்தாள்.

இனியா"என்று கொஞ்சம் அழுத்தமாக அகிலன் அழைத்த பிறகே,கதவை திறந்தாள்.

"என்னாச்சு??ஏன் ஒருமாதிரி இருக்க??"என்று அவளை ஆற்றுப் பார்த்தபடி கேட்க.

"இல்லை,தூக்க கலக்கம் அதான்.... என்று ஏதோ உளறக் கொட்ட.

அவளை‌ கண்டுக் கொள்ளாதவன், ஃபரஸ் அப் செய்துக் கொண்டு,உடை மாற்றி வந்தான்.நேராக குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட, அதற்குள் இனியா அவனுக்காக பாலை சூடு செய்து கொண்டு வந்திருநத்தாள்.

அவள் நீட்டிய பாலை,வாங்கி குடிக்க துவங்கியவன் "நலனை நாளைக்கு  zooக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டேன்,நான் வரலைன்னா கஷ்ட்டப்படுவான், அதனால் தான் நைட்டே கிளம்பி வந்துட்டேன் என்றவன் நிலானி அணைத்துக் கொண்டு தூங்க துவங்கினான்.

அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு மனம் வெம்பி விட்டாள் இனியா. சின்ன குழந்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட அவன் தனக்கு கொடுக்க மறுக்கிறான் என்ற பொழுது," என்னை ஏண்டா கல்யாணம் செஞ்ச" என்று  அவன் சட்டையை‌ பிடித்து உலுக்கி வேண்டும் என்று  தோன்றியது இனியாவிற்கு.

அது தந்த மன அழுத்தத்தில் தூக்கம்  வர மறுக்க,விடியலை கடந்தபிறகு தூங்கிப்போனாள்.அவளை சுற்றி ஏதோ சத்தம் கேட்டதில் எழுந்து அமர்ந்து கொண்டு நேரம் பார்க்க அது 10மணி கடந்து காட்ட,தலையை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

வெளியே சத்தம் வந்த வண்ணம் இருக்க, என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க,அப்பாவும் பிள்ளைகளும் குளித்து தயாராகி காலை உணவை சமத்தாகி அப்பா ஊட்டி விட, இருவரும் அகிலன் சொல்லும் கதைகள் கேட்டபடி உணவை வாங்கிக் கொண்டிருக்க.மற்ற நேரமாக இருந்திருந்தால் தன் கணவனை நினைத்து பூரித்து போயிருப்பாள்,ஆனால் இன்று இருக்கும் நிலையில் குழந்தைகளும் அவன் அருகாமையை நாடுகிறார்கள் என்னும் போது , இவர்களுக்கும் நான் தேவையில்லையா???என்று யோசித்து இங்கு இனியாவிற்கு மனம் அடித்துக் கொண்டது.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Where stories live. Discover now