கண்ணம்மாவின் காதலன் -15

383 31 0
                                    

திரும்பவும் தன் மாமா வீடு வந்து சேர்ந்தாள் இனியா,அதை யோசிக்கும் போதே அத்தையும் ஆங்காரமான பேச்சும்,அவர் நடத்தும் விதவும் கண்முன்னே ஓடியது.

ஆனால் இதற்காக அகிலன் எவ்வளவு ஆசையாக காத்திருக்கிறான் என்பதையும் சேர்த்தே யோசித்தாள்.எப்பொழுதும் இருப்பதை விட இந்த நான்கு நாட்களாக மகிழ்ச்சியாக இருப்பதாகவே தோன்றியது‌.இரண்டு நாட்களாக இரவு உணவை அவளை சமைக்க சொல்லி இருவருமாக சேர்ந்தே உண்டார்கள்,அவனின் இந்த சிறு மாறுதல்கள் கூட இனியா வை அத்தனை மகிழ்ச்சியாக்க,இந்த இரண்டு நாட்களை நல்லபடியாக கடந்து விட்டால் தங்கள் உறவில் இன்னும் நல்ல முன்னேற்றம் வரும் என்பதை அவள் உறுதியாக நம்பினாள்.

இனியாவை வீட்டில் விட்டவன் "இனியா அம்மா கோவிலில் இருந்து வர நேரம், எனக்கு கொஞ்சம் அவசர வேலையிருக்கு பார்த்துக்கோ" என்று புன்னகைக்க,இனியா "சரி" என்பது போல தலையாட்டி வைக்க அகில் ஸ்டேஷனுக்கு கிளம்ப,அவனோடு ரவியும் இனியா விடம் விடைப்பெற்று கிளம்பி விட இனியா இன்னும் பதற்றமானாள்.அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க அதற்குள் கதிர்,ரோகிணி,அபி மூவரும் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.

என்ன தான் ரவிசங்கர் மூத்தவர் என்றாலும் இளையவர் ராம் சங்கருக்கே குடும்பத்தில் முதலில் குழந்தை பிறந்தது அது நம் அகிலன், அவனுக்கு இரண்டு வருடம் கழித்தே ரவிசங்கர் -ராஜீக்கு பிறந்தவன் கதிரவன் அதன்பிறகு இரண்டு வருடங்களுக்கு பின் பிறந்தவள் ரோகிணி.அபிராமி தான் வீட்டின் கடைக்குட்டி அவள் பிறந்த ஒரு வருடத்தில் ராம்சங்கரும் - வித்யாவும் ஒரு விபத்தில் இறந்திருக்க நான்கு பேரும் ஒரே வீட்டிலே வளர்ந்தனர்.அதிலும் வித்யா ராஜியின் தங்கை என்பதால்,தன் தங்கை பிள்ளைகளை தன் பிள்ளைகள் போலவே வளர்த்தார்.என்னதான் ரவிசங்கர் காவல்துறையில் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அதற்கு முன்பே செல்வ வளம் மிக்க குடும்பம் அவருடையது.ராஜியும் பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்,வீடு குடும்பம் என்று இருந்தாலும் அவருடைய குடும்ப பிசினஸ்களை அவரை தனி ஆளாக கவனித்துக் கொண்டார்‌.அவர்களுக்கு சொந்தமாக கல்யாண மண்டபங்கள், ஜவுளிக்கடைகள்,இரண்டு பள்ளிகள் என்று அத்தனையும் நிர்வாகிப்பவர். அவர் சொல்லும் வார்த்தையே அந்த வீட்டில் வாக்கு, ரவிசங்கரை கண்டால் ஊரில் உள்ள களவாணிகள் நடுங்க,அவரோ மனைவியின் சொல்லை கேட்டு‌ நடக்க,பிள்ளைகளும் அப்பா வழியை பின்பற்ற,இதில்அகிலன் என்றால் ராஜிக்கு  தனி பிரியம் அவனும் அப்படியே.கதிர் கூட சில நேரங்களில் துடுக்காக ராஜியை எதிர்த்து பேசுவான்,ஆனால் அகிலன் எப்பொழுதும் அம்மா பிள்ளை தான்.பிள்ளைகளில் அகில் தன் தந்தை வழியை பின்பற்றி போலீஸ் வேலைக்கு செல்ல, தம்பி கதிரோ அண்ணன் வழியை தொடர்ந்து அவனும் ஐ.பி.எஸ்ஸில் தேர்வாகி அடுத்த பயிற்சி நேரத்திற்கு காத்திருக்க.பி.ஈ முடித்த கையோடு ரோகிணி தன் அம்மாவோடு பிசினஸை கவனிக்க துவங்க,அபி கல்லூரி பி.ஈ ஆர்க்கிடெக் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Where stories live. Discover now