காலையில் பந்தக்கால் நடுவதில் துவங்கி,ராஜி சொன்னப்படி மொத்த வீடும் சுழன்றுக் கொண்டிருந்தது.இனியா,அகில்,அபி,ரோ எல்லாரும் வேலையில் முழ்கி இருக்க,கதிர் மாப்பிள்ளை என்பதால் சாவகாசமாக அமர்ந்து ஃபோனில் முழுகிவிட்டிருந்தான்.
அதற்கு நடுவில் மறக்காமல் இனியாவிடம் பேசி அவளை வம்புக்கு இழுப்பதும் சிரிக்க வைப்பதுமாக இருந்தான் கதிர்.மாலையில் நலங்கு துவங்குவதற்காக ஏற்பாடுகளை அபியும்,இனியாவும் பார்த்தப் படி இருக்க, மாப்பிள்ளை போன்று தயாராகி வந்தவன், தன்னை ஃபோட்டோ எடுக்க சொல்லி போஸ் கொடுத்தான்.
இனியாவும் அவனை சலிக்காமல் எடுக்க, "அம்மு, வா நம்ம இரண்டு பேரும் ஃபோட்டோ எடுத்துக்கலாம், இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு......"என்று போலியாக பெருமூச்சு விட.
"அடப்பாவி ஹே தீரா..... இரண்டு நாளில் கல்யாணத்தை வைச்சிக்கிட்டு பேசற பேச்சா இது தமயந்திக்கு சொல்றேன்...."என்று இனியா எச்சரிக்க.
"அம்மா பயந்துட்டேன்..."என்று கீண்டலாக சிரித்தான்.
"அவளுக்கு என்னை தெரியும் அம்மு.... எத்தனை பெண்களை பார்த்தாலும் ஃப்ளர்ட் செஞ்சாலும்,அவ தான் எனக்கு எல்லாமேன்னு தெரியும், எனக்கும் என் அளவு எதுன்னு தெரியும்..."என்று அவன் உணர்நது சொல்லிக் கொண்டிருக்க
அவனின் நெகிழ்ச்சி இனியாவையும் தொற்றிக் கொள்ள,"நீங்க இரண்டு பேரும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்" என்று கதிரின் கைகளை பற்றிக் கொண்டாள் இனியா.
"நிச்சயமா அம்மு"என்றான்,பின் இருவருமாக சேர்ந்து செல்ஃபிகளை எடுத்துக் குவித்தனர்.
நேரம் றெக்கை கட்டி பறக்க,அடுத்த நாளும் வந்தது.காலை எழுந்தது முதலே அனைவரும் பரபரப்பாக வேலை செய்ய,இனியாவிற்கு யாரோ தன்னை பார்ப்பது போல தோன்ற, திரும்பி பார்த்தால் அங்கே அகில் சோகமான முகத்துடன் நின்றுக் கொண்டிருநத்தான்.
காலையில் இருந்தே தன்னை பார்வையாலே தெடர்ந்துக் கொண்டிருக்கிறானோ என்று சந்தேகம் அவளுக்கு.
ESTÁS LEYENDO
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romanceநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...