கண்ணம்மாவின் காதலன்-24

350 36 14
                                    

மொத்த இரவும் இனியா தூக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.அவர் தான் செய்த ஒவ்வொன்றும் தெரிந்து வைத்திருக்கிறார் நான் எப்படி கவனிக்காமல் விட்டேன் என்பது தான் அவளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வியாக இருந்தது.

ஒருபுறம் அகிலிற்கு முதலில் இருந்தே தன்னை பிடித்திருக்கிறது என்பது மகிழ்வை கொடுத்தாலும், மறுபுறம் மித்ரா விஷயங்கள் அனைத்தும் பொய் என்றான பின்பு,தான் அகில் மீதான கோபத்திற்கு தான் என்ன நியாயம் இருக்கிறது, இத்தனை நாட்கள் அவனையும் வதைத்து குழந்தைகளையும் வதைத்து இருக்கிறோம்,அவன் சொல்வது நியாயம் தான், தான் செய்து வைத்த வேலைகளால் இனிமேல் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றியது இனியாவிற்கு.

இனிமேல் அகிலை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து குழம்பியவள்,விடியலில் உறங்கிப் போனாள்.

அவள் விழிக்கும் போது காலை 8மணியாகி விட்டிருந்தது.எழும்போதே நேற்று இரவு அகிலன் சொன்ன விஷயங்கள் நினைவில் ஊர்வலம் போக மன அழுத்தத்தில் கண்களில் நீர் நிறைத்தது.

தன்னை சரிசெய்துக் கொண்டு வெளியே வரவும் அங்கே குழந்தைகள் அகிலோடு ஓடிப்பிடித்து விளையாடி வீட்டை இரண்டாக்கி கொண்டிருந்தார்கள்.

இனியா வை கண்டதும் குழந்தைகள் இருவரும் வீட்டை கலைத்ததிற்கு திட்டு விழுமோ,அடி விழுமோ என்று பயந்து அகிலனின் கால்களுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்ள,அவர்கள் செய்த அந்த சிறு விஷயம்,
அகில் தான் செய்த தவறுகளை முன்னிறுத்தி குழந்தைகளை தன்னோடு அழைத்து சென்று விடுவானோ என்ற தேவை இல்லாத எண்ணங்கள் இனியாவின் மனகலக்கத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது.

அந்த நேரத்தில் பேச ஏதும் வார்த்தைகளை இன்றி உணவு தயாரிக்க கிச்சனுக்கு சென்றவள், ஒவ்வொன்றாக செய்ய துவங்க, முதலில் சாதாரணமாக இருந்தவள் நேரம் செல்ல செல்ல பலகினமாக உணர துவங்கினாள்.

அதே நேரத்தில் அங்கே வந்த நிலா "மா என்னுடைய மேத்ஸ் புக்கையை காணோம்மா ,தேடிக் கொடுக்கிறீயா???என்று கேட்க.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Opowieści tętniące życiem. Odkryj je teraz