இந்த எ.பியில் இருந்து அகிலன்- இனியாவின் திருமணம் முதல் பிரிவு நடந்தது முதலில் வரும்,அதன் பிறகு நிகழ்காலத்தில் நடக்கும் கதை வரும்.
2011 ஜூன் மாதம்
அந்த வீட்டின் கூடத்தில் நின்றிருந்தான் அகிலன்.அவன் தன் முன்பு கிடத்தி வைக்கப்பட்டிருந்த தன் மாமா சிவாவை பார்த்தான்,ஒற்றை நாடி உருவமாக, கண்களில் உயிரை தேக்கிவைத்தி தன் மகளை பார்த்த வண்ணமாக இருந்தார்.சிறு வயதில் தன் அத்தையோடு எத்தனையோ முறை அவரை பாரத்திருக்கிறான்.அஜனாபகுவான அவரது அன்றைய தோற்றம் கண்முன்பு வந்து சென்றது.இனியா அவரின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு மௌனமாக அழுது கரைந்துக் கொண்டிருந்தாள்.
சரியாக சாப்பிடாமல்,தூங்காமல் இருந்திருப்பாள் போலும்,அவளின் அசதி அவள் முகமும் கண்ங்களும் காட்டிக் கொடுக்க,அகிலனுக்கு சட்டென்று அவள் மீது இரக்கம் வந்துவிட்டது.
அதிலும் அவள் அழுகையை கையை கட்டிக் கொண்டு அவனால் அமைதியாக பார்க்க முடியவில்லை,அவளை தன் தோளோடு சாய்த்து ஆறுதல் படுத்த மனம் பரபரக்க, முயன்று தன்னை அடக்கிக் கொண்டான்.
அப்போது மாமா பெரியப்பா விடம் ஏதோ சைகையில் செல்ல,ரவி எழுந்து வந்தவர் நேராக அகிலனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவர் "அகில்,உன் அத்தை போய் சேர்ந்து பத்து வருஷமாச்சு,அவ சாக முன்னால் எங்கிட்ட கேட்டது ஒண்னே ஒண்ணு தான் அது அகிலன் தான் இனியாவுக்கு புருஷனா வரணும் "என்று சொல்லிவிட்டு அகிலின் முகத்தை ஏறிட.
" அம்மாவுக்கு இது பிடிக்கவே பிடிக்காது,அந்த பொண்ணை அம்மா கண்டிப்பா ஏத்துக்கவே மாட்டாங்க ,அம்மா வேணாம்ன்னு சொல்ற விஷயத்தை நான் செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா ப்பா......."என்று அகிலன் வாதிட
"டேய் ஒருத்தர் சாக கிடக்கிறார்,இப்போ கூட உன் அம்மாவுடைய வரட்டு கௌரவம் தான் உனக்கு பெரிசா தெரியுது.....உன் அம்மாவை எப்படி சமாதானம் செய்யணும்ன்னு எனக்கு தெரியும்,நான் கேட்கிறது உன் சம்மதம் தான்
YOU ARE READING
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romanceநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...