இனியா காலையில் இருந்து வேலையில் சுழன்றுக் கொண்டிருந்தாள், அறையை அடைந்ததும் "அப்பாடா"என்ற பெருமூச்சோடு தான் உள்ளே நுழைந்தாள்.
அங்கோ அகில் இரவு உடையில் மெத்தை மீது அமர்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன்,இனியா வை கண்டதும் "ஹே குல்ஃபி வந்துட்டியா??"என்று கண்ணடித்து சிரித்தான்.
அகிலின் வார்த்தைகளை கேட்டு இனியா குறுகுறுவென பார்த்தவள்,பின் ஏதோ புரிந்தவளாக "ஆதி ஆளை விடுங்க,நானே டயர்டா இருக்கேன்"என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாள்.
"என்ன இனியா........என்ன சொல்ற.???.... பசங்க என் அம்மாவோட தூங்கப் போயிட்டாங்க,நீயும் எல்லா வேலையும் முடிச்சு,நான் எதிர்பார்த்த நேரத்தை விடவே சீக்கிரமா வந்துட்ட ,சரி நிம்மதியா கொஞ்சம் நேரம் நமக்கான நேரமா இருக்கலாம் யோசிச்சேன்.....நீ டயர்டா இருப்பேன்னு குளிக்க ஹீட்டர் போட்டிருக்கேன், இங்க பாரு வாசனை மெழுகுவர்த்தி ஏற்றி வைச்சிருக்கேன், உனக்கு பிடிச்ச பால் சார்ப்த் வாங்கி ஃப்ரிட்ஜில் வைச்சிருக்கேன்...... ம்ம்ம்... உனக்கு பிடிச்ச பாட்டையெல்லாம் அலெக்சாவை போட்டு ரெடியா வைச்சிருக்கேன்.....போ சீக்கிரமா குளிச்சிட்டு வா..."என்று அகிலன் இனியாவை கிளப்பினான்.
ஆனால் அந்த நேரத்தில் குளியல் சற்று புத்துணர்வை அவளுக்கு கொடுத்தது.தன் இரவு உடையை மாற்றிக் கொண்டது வருவதற்குள்,அவள் கொரிக்கவும்,குடிக்கவும் எடுத்துவைத்துவிட்டு," சுந்தரி கண்ணால் ஒரு சேதி...."என்று மெலிதாக பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இனியா வை கட்டிலில் அமர வைத்தவன்,வெதுவெதுப்பான சோப்பு நீரில் அவள் கால்களை வைக்குமாறு சொல்லிவிட்டு அவளுக்கு சாப்பிட தட்டில் ஸ்நானக்ஸூம்,ஜூஸூம் கொடுத்தான்.
அவன் செய்கையில் பாய்ந்து சென்று கட்டிக் கொண்டாள் இனியா. "என்னாச்சு...என்னடி???"என்று இனியா வின் செய்கையில் புரியாமல் கேட்கவும்.
"எனக்காக இப்படி பார்த்து பார்த்து செய்தால் நான் என்னதான் செய்றது??என்று போலியாக இனியா சலித்துக் கொண்டாள்.
YOU ARE READING
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romanceநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...