முதலில் அவளை கொஞ்சம் பயமுறுத்தலாம் என்றே உதடு நோக்கி நகர்ந்தது, ஆனால் இனியா வேண்டாம் என்று தலை அசைக்க, கண்டிப்பாக அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று உள்ளுக்குள் சூளூரைத்துக் கொண்டு அதை சாதித்தவன், பின் அவளை விட முடியாமல் தடுமாறி,தன்னை அவளிடம் தொலைத்தான்.இனியாவின் மூளையோ எப்போழுதோ வேலை நிறுத்தம் செய்திருந்தது,தன்னை முழுதாக அவனிடம் ஒப்புவித்து நின்றாள்.
நொடிகள் நிமிடங்களாக மாற,அவன் இன்னும் மூர்க்கமாக மாற,ஏதோ நெடு நாள் காத்திருந்தவன் போல தேடலில் இறங்க, இனியா தான் துவண்டு போனாள்.அவள் உடம்பு சில்லிட துவங்கியதை உணர்ந்தவன் மெதுவாக அவளை விளக்கினான்.
அவன் திடிர் விலகலின் அர்த்தம் புரியாமல் இனியா விழிக்க , அவனுக்கு இன்னும் குற்றவுணர்வு ஏற்பட,அவளை அழுத்தமான அணைப்பில் நிறுத்தினான்.
இனியா தான் காண்பது கனவா??நிஜமா என்று புரியாமல் யோசிக்க,அணைத்திருந்ததில் அகிலனின் சூடான மூச்சுக்காற்றும் ,அவனின் தாறுமாறான இதயத்துடிப்பும் இது அனைத்தும் நிஜம் என்று அவளுக்கு உரைத்தது.
சரியாக அப்பொழுது வெளியே "அண்ணி"என்று அபியின் குரல் கேட்க.இனியா வேகமாக அவனை பிரிந்து நின்றாள் "போகணும்"என்று உதடு சொல்ல, "வேணாம் நீ எங்கேயும் போக வேணாம்"என்று மனம் போராட்டம் நடத்த, அகிலனோ "போ" என்று அவளை பார்த்தப் படி சொல்ல கால்களை கஷ்ட்டப்பட்டு நகர்த்தி வெளியேறினாள்.
அதன்பிறகு ரோ,அபி,இனியாவை அழகு நிலையத்தில் இருந்து வந்திருந்தவர்கள் மெருகேற்ற, எல்லாம் முடிந்து அவர்கள் திரும்புகையில் மாலை ஆகியிருக்க,பெண்களோ கையில் முழங்கை வரையில் மெஹந்தி இட்டுக் கொண்டிருந்தார்கள்
இனியா திரும்பி வருகையில் அகிலன் இல்லாதை கண்டு வருத்தமும்,நிம்மதியும் ஒரே நேரத்தில் வந்தது.காலை நிகழ்விற்கு பிறகு அவன் முகத்தை எப்படி பார்ப்பது என்று வெட்கத்தில் மனம் தவித்தது,"இப்போ அவர் இங்க இருந்திருக்கலாம் என்று அதே மனமே சொல்லியது"எல்லாவற்றையும் விட,அவனின் நிலைப்பாடு என்ன என்பது அவளுக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்று விரும்பினாள்.
CZYTASZ
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romansநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...