அகிலனின் பார்வை வந்திருந்த விருந்தினர்களை நோக்கி இருக்க, மொத்த கவனமும் உணர்ச்சி துடைத்த முகத்தோடு நிற்கும் இனியா மேலே இருந்தது.
முகத்தை சாதரணமாக அவள் வைத்திருந்தாலும் உள்ளுக்குள் ஒடும் யோசனையை அவன் அறியாதவன் அல்லவே.
காலையில் அந்த ரஞ்சனி அத்தை பேசியதில் அவனுக்கே அத்தனை கோபம் வரவழைக்க,இனியாவிற்கு வராமல் போனால் தான் ஆச்சரியம்,அவளும் ரஞ்சனியை எதிர்த்து பேசினால் தேவையில்லாத பிரச்சனைகள் முளைக்கும் என்றே அதை தவிர்த்தாள் என்பதும் அவனுக்கு புரியாமல் இல்லை,நியாயமாக தான் தான் அவரின் பேச்சை அடக்கி இருக்க வேண்டும்,ஆனால் அந்த இடத்தில் அவனால் தன் அம்மாவின் முன்பு எதையும் தடுக்க இயலாது நிலையில் நிற்க, ஏற்கனவே அந்த கோபத்தில் இருந்தவன், மாலையில் இனியா அப்படி அடம்பிடித்து நிற்கவும், அவள் மீது தப்பு ஏதுமின்றி இருந்தப் பொழுதும் அவளிடம் கடுமையாக நடந்துக் கொண்டான்.
அவளை எப்படியாவது சமாதானம் செய்துவிடலாம் தான், ஆனால் தன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை தானே உடைத்து அவளை காயப்படுத்தியதை எண்ணி மனம் கலங்கினான்.
மாலை 7 மணிக்கு துவங்கிய வர்கள் இரவு 9 மணியை கடந்த பிறகும் சொந்தங்களும், நண்பர்களும் வந்துக் கொண்டிருக்க சற்று ஒய்ந்து தான் போனார்கள்.
சரியாக அதற்குள் இருவரையும் சாப்பிட அழைக்க,அங்கே உணவு உண்ணும் இடத்தில் அபி,ரோ,கதிர் ,யுகா நால்வரும் இனியா வை மாறி மாறி உபசரிக்க ,அகிலன் தான் எரிச்சலானான்.
சாப்பிடும் போது அவளிடம் பேச வேண்டும் என்று திட்டம் தீட்டியிருக்க,இப்படி அவனை ஏதும் செய்யவிடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் அவளோடு கதை அளக்க,அதுவரை இல்லாத மலர்ச்சி அவள் முகத்தில் குடியேறியதும்,அகிலும் அவள் சரியானால் போதும் என்று சற்று விலகியிருந்தான்.
இனியா முதலில் சாப்பிட்டு எழுந்தவள் அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த கதிரிடம் கதை பேச சென்றாள்.ஒருகட்டத்தில் அவன் பேச்சை கேட்டு சிரிக்க துவங்கியவள் ,கையிலிருந்த தண்ணீர் பாட்டில் கொண்டு அவன் தலையில் தட்ட,அவனோ பதிலுக்கு இனியா வின் கையில் இருந்த ஐஸ்கிரீம் கப்பை பிடுங்க பார்க்க, சரியாக அங்கே வந்தான் அகிலன்.
YOU ARE READING
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romanceநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...