கண்ணம்மாவின் காதலன் -31

584 29 12
                                    

இரண்டு நாட்களாக இனியா கோபத்தில் கனன்று கொண்டிருந்தாள் .முன்தினம் கிச்சனில் காலை நேரத்தில் பரபரப்பாக வேலையில் இருக்க,அங்கே வந்த அகில்,அவள் கைகளை பற்றி நிறுத்தியவன்"குல்ஃபி,பிஸியா இருக்கியா?? என்று துவங்கினான்.

"பார்த்தா எப்படி தெரியுதாம்??"என்று தன் கைகளை விடுவித்துக் கொள்ள பார்த்தாள்.

"என்னடி டயர்டா இருக்கீயா....நான் ஏதாவது ஹேல்ப் செய்யட்டுமா???"என்று கரிசனமாக கேட்டான்.

"என்ன வேணும்?? இல்ல என்ன செஞ்சீங்க?? எதுக்கு இப்படி ஐஸ் வைக்கறீங்க??"என்று கேட்டாள்.

"சே சே.... அப்படி ‌எல்லாம் இல்லடி,இந்த வீக்எண்ட்டிற்கு‌ அவசரமா கொச்சின் வரைக்கும் போக வேண்டி‌இருக்கு.‌‌...‌..."என்று பம்மியப்படி பேசினான்.

"ஓ!!! இதான் விஷயமா??அப்போ‌ இந்த வாரமும் கூர்க் போக முடியாது???8மாசமா விதவிதமான காரணம் சொல்லிட்டு இருக்கீங்க,ஸ்வே,,மாறன் இரண்டு பேரும் எனக்கு ஃப்ரண்ட்ஸ் அவங்க கல்யாணத்திற்கு தான் போக முடியலை......நேரிலும் பார்க்கவும் கூட்டிட்டு போக மாட்டறீங்க,நலன் கேட்டதும் ஊட்டி கூட்டிட்டு போறீங்க,நிலா கேட்டதும் ப்ளைட்டில் கூட்டிட்டு போறீங்க....ஆனா நான் கேட்டகிற இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்ய முடியாதில்லை??என்று கோபத்தில் இனியா வெடிக்க.

"ஹே காலையில் ஏண்டி இப்படி ஆரம்பிக்கிற.......இந்த வாரம் முக்கியமான ஆளை பிடிக்க நான் தான் போகணும்ன்னு சொல்லிட்டாங்க.....அடுத்த வாரம் போகலாம்...."என்று அவன் முடிப்பதற்குள்

"நான் எங்களையும் வரலை,நீங்க கிளம்புங்க,உங்ககிட்ட இனிமேல் எதையுமே கேட்ட பாருங்க.!!!!"என்று இனியா சவால் விட.

"ஏன்டி காலையிலே இப்படி ரகளை செஞ்சிட்டு இருக்க??? எனக்கு வேலையில் ப்ரஷர்ன்னு வீட்டுக்கு வந்தா,இங்கேயும் நீ என்னை படுத்தற,ஏன்டா இங்க வரோம்ன்னு இருக்கு...என்று சலித்துக் கொண்டான்.

"ஓ!!!!என்னை பார்க்கவே பிடிக்கலை தானே...அப்போ என்னை பார்க்காதீங்க,எங்கிட்ட பேசாதீங்க....நானும் உங்களோட பேசபோறதில்லை"என்று கத்தி இருந்தாள்.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Where stories live. Discover now