கண்ணம்மாவின் காதலன்-26

352 33 11
                                    

காலையில் இருந்தே மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள் இனியா. அகில் கிளம்பி இரண்டு நாட்களான நிலையில் அவனை பற்றி நினைப்பில் சுழன்றுக் கொண்டிருந்தாள்.

திரா-தமயந்தி கல்யாணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களை இருந்தது,எப்படியும் அதற்கு போக தான் வேணும், ஆனால் அதற்கு முன் சில விஷயங்களை அகிலுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

இந்த யோசனையின் ஊடே அவள் பள்ளிக்கு தயாராகி கொண்டிருந்த பொழுது தான் திரா அழைத்தான். தனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனை  மறைத்து "ஹாய் மாப்பிள்ளை சார்,என்ன காலையிலே கூப்பிடறீங்க"என்று சகஜமாக பேச துவங்கினாள் இனியா.

"அம்மு ரொம்ப நேரமா அகில் உன் நம்பருக்கு கூப்பிட பார்த்திருக்கான்,ஆனா ரீச் ஆகலைன்னு சொன்னான்.அதனால் தான் கூப்பிட்டேன்.."என்றவனின் குரலில் அப்பட்டமாக பதற்றம் தெரிந்தது.

"என்ன திரா??? ஏதாவது பிரச்சனையா??ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு"என்று யோசனையோடு  இனியா  கேட்க.

"அதை சொல்லத்தான் கூப்பிட்டேன் இனியா.... அந்த பிரதாப் கோர்ட்டிற்கு போற வழியில் தப்பிச்சிட்டான்.அதனால் தான் நீயும் குழந்தைகளும் இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம், கொஞ்ச நேரத்தில் உங்க பாதுகாப்பிற்கு லோக்கல் போலிஸ் வந்துடுவாங்க, ஜாக்கிரதை இருங்க....நான் திரும்ப கூப்பிடுறேன் "என்று பதிலுக்கு கூட காத்திராமல் அவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

அவன் சொல்லிய வார்த்தைகள் பயத்தை கொடுக்க தலையை பிடித்தப்படி அமர்ந்துவிட்டார் இனியா. இரண்டு நாட்களாக தான் நலனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எண்ணி சற்று தெளிந்திருந்த மனம்,திரும்பவும் கலங்கிப் போனாள்.

அப்பொழுது "என் உயிருக்கே கூட பிரச்சினை வரலாம் என்று சொன்ன அகிலனின் வார்த்தைகள் நினைவிற்கு வரவும்,இன்னும் பதற்றமானாள்.

உடனடியாக அகிலிற்கு அழைத்தாள். ஆனால் ஏனோ அவனை தொடர்புக் கொள்ள முடியவில்லை.அவனிடம் பேசினாலாவது சற்று நிம்மதியாக இருக்கும் என்று திரும்ப திரும்ப அழைத்து பார்க்க,ஆனால் அதில் எந்த பயனும் இருப்பது போல் தெரியவில்லை.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Where stories live. Discover now