கண்ணம்மாவின் காதலன்-18

383 29 3
                                    

அகிலனின் வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு திரும்பி ஒரு‌வாரம் கடந்திருந்தது.இத்தனை நாட்களாக இனியா வின் கண்ணில் படாமல் அகிலன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.

அவன் வருவதையும்,இங்கு தங்கிவிட்டு செல்வதையும் இனியாவால் நன்றாகவே உணர முடிந்தாலும் அவனை அவளால் பார்க்க முடியாமல் வாழ்க்கை சூனியமாகி போனது போன்ற உணர்வு.

தேவையில்லாமல் அவனோடு சண்டை போட்டு விட்டோமோ என்று ‌சிந்திக்கும் அளவிற்கு அவள் சென்று விட்டாள்.இப்படி அவள் நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்க, வீட்டிற்கு வெளியே அழைப்பு மணி கேட்க, ஒருவேளை அகிலன் தான் வந்தானோ என்று வேகமாக சென்று கதவை திறக்க,அங்கே கதிர்,அபி,ரோகிணியோடு ஒரு புதியவளும் நின்றிருந்தாள்.

அவர்களை கண்டதும் ஹே என்ன சர்ப்ரைஸ் இது என்று இனியா ரோகிணியையும்,அபியையும் கட்டிக் கொள்ள.அந்த புதியவள் இனியா வை கண்டதும் சிநேகமாக புன்னகைக்கவும்,இனியாவிற்கு சட்டென்று பிடித்து போனது.

அவர்களை உள்ளே அழைத்தவள்,கதிரிடம் "என்ன திரா என்னை பார்க்க இவ்வுளவு தூரம் வந்திருக்கீங்க,பெருமையா இருக்கு......"என்று அவனை கிண்டலடிக்க.

"ச்சீ, உன்னை பார்க்க யாரு வருவாங்க,இங்க 9 ப்ளாக்கில் மான்சின்னு ஒரு பெண்குட்டி உண்டு,அவளை நோக்க யான் இவ்விடம் வந்தது"என்று வராத மலையாளத்தில் அவன் அளக்க துவங்க.

மற்ற நான்கு கடுப்பாக அவனை பார்க்க,அந்த புது பொண்ணோ கண்களாலே அவனை எரிப்பதை இனியா கவனித்தாள்.

"ஓ!!! அப்படியா???அகிலுக்கு இந்த பொண்ணை பற்றி தெரியாது போல,நானே சொல்லி......"என்று அவன் முடிப்பதற்குள்.

"ஹே ஹே...... நீயெல்லாம் ஒரு பொண்ணா !!!!விஷப்பாட்டில் யாருக்கிட்ட போட்டுக் கொடுக்க பார்க்கிற நீ???, இந்த பொண்ணை எப்படியாவது ஓ.கே செஞ்சு,மலையாள தேசம் பக்கமா செட்டிலாகளாம்ன்னு பார்க்கிறேன்......ப்ளிஸ் அம்மு "என்று பம்மி பேச.

அதற்குள் ரோகிணி "டே நீ கொஞ்சம் ஜாஸ்தியா தான் போற , தமயந்தியை பாரு அவ முகமே வாடி பேயிடுச்சு"என்று வருத்தப்பட.

கண்ணம்மாவின் காதலன்( Completed)Where stories live. Discover now