இரண்டு நாட்களுக்கு பிறகும் பார்வையினாலே தொடர்ந்துக் கொண்டிருந்தாள் இனியா.
அவனோ எதையும் கண்டுக் கொள்ளாமல் நகர்ந்திருக்க.மாலையில் எப்பொழுதும் போல பார்க்கில் நடந்துவிட்டு அங்கு மர பென்ச்சில் அமர்ந்து விளையாடும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது குழந்தைகள் பந்து தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருக்க,அது சென்று மரத்தில் மேல் கிளையில் சிக்கிக் கொள்ள,பந்து வைத்திருந்த குழந்தை சத்தம் போட்டு அழத் தொடங்கியது.குழந்தைகள் பந்தை எடுக்க முயற்சிக்க, அருகில் இருந்த இனியா வை "ஆன்ட்டி ப்ளிஸ் எடுத்துக் கொடுங்கன்னு "என்று கூட்டமாக வந்து கேட்க.அருகில் இருந்தவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்க, குழந்தைகள் கேட்கும் பொழுது வேறு வழி இருக்கவில்லை,இனியாவிற்கு
ஒரு தைரியத்தில் மரத்தின் மீது ஏறி, மேலிருந்து பார்க்க தலை கிறுகிறுக்க பொறுமையாக இன்னும் மேலே ஏறி கிளையை உலுக்க பந்து கீழே விழுந்தது.
குழந்தைகள் "தேங்க்ஸ் ஆன்ட்டி"என்று ஒட.இனியா மெதுவாக கீழே இறங்கினாள்,கீழே வந்துட்டோம் என்று குதிக்க "அம்மா" என்று அலறினாள்.நன்றாக கால் சுளுக்கி விட்டது.
"ஹே உனக்கு எதுக்கடீ இந்த வேலை" என்ற குரல் அவள் தன் வலியிலும் நிமிர்ந்து பார்க்க.அங்கே அகிலன் நின்றிருந்தான்.
பத்து நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு வந்தவன் பார்க்கிங்யில் வண்டியை நிறுத்தி விட்டு வெளியே வந்தவன் கண்களுக்கு இனியா பார்க்கில் அமர்ந்திருப்பது தெரிய, அமைதியாக அவளின் முகபாவங்களை ரசித்துக் கொண்டே நின்றிருக்க,இனியா மரத்தின் மேலே ஏறிய விதத்தை கண்டதும் ஏதோ உள்ளுணர்வு தோன்ற வேகமாக அவளை நோக்கி நடந்தான் அதற்குள் அவள் பொறுமையாக இறங்குவதை கண்டு,அகிலனும் தன் நடையை நிதானித்தான்.
அதற்குள் தான் இனியா தடுமாறு கீழே விழுந்தது.இனியா ,அகிலனை கண்டு திருதிருவென்று முழிக்க "இன்னும் என்ன கனவா கண்டுட்டிருக்க?? எழுத்துரு டாக்டரை போய் பார்க்கலாம்"என்று இன்னும் திட்ட துவங்க.
YOU ARE READING
கண்ணம்மாவின் காதலன்( Completed)
Romanceநம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பி...