🔱யின்
❤All in All
❤அழகனின் அழகி❤❤பாகம் 5️⃣
(முதல் இரவு அறையில்)
திரு : தமிழ் என்ன பண்றீங்க
தமிழ் : நான்தான் சொல்றேனே உங்களுக்கு என்ன வேணுமோ...,
திரு : ஏங்க என் காதலை கொச்சைப் படுத்தாதீங்க..... நான் உங்களை பார்த்ததுமே நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.....அது இந்த மாதிரி அற்பத்தனமான சந்தோஷத்துக்காக எல்லாம் இல்லைங்க....நான் உங்க கூட வாழனும்னு ஆசைப்படறேன்......
என் காதலை உங்ககிட்ட நான் தெரியப்படுத்தின விதம் வேணும்னா உங்களுக்கு அதிகப் பிரசங்கித் தனமாக தெரிந்திருக்கலாம்... மத்தபடி இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் இல்லைங்க..... உங்களை நான் நேசிக்கிறேன் முதல்ல இந்த மாதிரி பண்ணாதீங்க...எனக்கு...... எனக்கு என்னையே நினைச்சா அருவருப்பா இருக்குங்க....என்று சொன்னபடி திரு அவளின் புடவையை எடுத்து அவள் மீது போர்த்தியவன்
திரு : இங்க பாருங்க... எனக்கு உங்க சூழ்நிலை புரியுது....நான் உங்க அப்பா கிட்ட வந்து முறைப்படி சம்மதம் கேட்டு தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டேன்... ஆனா இதெல்லாம் ஒரு கனவு மாதிரி நடந்துருச்சு... உங்களுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கும்ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது...நான் யாரு என்னன்னு கூட உங்களுக்கு தெரியாது...நான்...எனக்கு... எப்படி சொல்றதுன்னு தெரியல....ஆனா உண்மையா சொல்றேன்... நான் உங்களை இன்னும் அதிகமா நேசிக்கிறேன்..கண்டிப்பா உங்களுக்கு நான் ஒரு நல்ல புருஷனா இருப்பேன்
நீங்க தயவுசெய்து இப்படி எல்லாம் இனிமே பண்ணாதீங்க....முதல்ல அழாதீங்க எனக்கு எனக்கும் தான் ஒரு மாதிரி இருக்கு.....நான் தாலி கட்டுவதற்கு முன்னாடி கூட உங்க கிட்ட பேசுறதுக்கு முயற்சித்தேன்...ஆனால் ஊர் மக்கள் எல்லாரும் என்னென்னமோ சொல்லி நானும்தமிழ் :.....................
திரு : தப்பு தாங்க உங்களுடைய சம்மதத்தை நான் கேட்டிருக்கணும்... ஆனால் என் மேல இருக்கிற கோபத்துல இன்னும் ஒரு முறை இந்த மாதிரி எல்லாம் பண்ணிடாதீங்க..உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சி இருக்கேன்... உங்களை நான் காதலிப்பது எவ்வளவு உண்மையோ அதைவிட அதிகமா தாலி கட்டின அந்த நொடியிலிருந்து நீங்க தான் என் உலகம் என்று நினைக்கிறதும் உண்மை......நீங்க என்னடா இவன் முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட இப்படியெல்லாம் பேசுறானே இப்படி ஒரு பொறுக்கி கையாள நம்ம தாலி கட்டி கொண்டோமேன்னு கூட நீங்க நினைச்சு கஷ்டப்படலாம்..... அது ஏன்னு தெரியல உங்கள...உங்களை பார்த்ததுமே ஏதோ பூர்வ ஜென்மத்தில் உங்க கூட ஆசை தீர வாழ்ந்த மாதிரி ஒரு உணர்வு...அது அதை நான் மனசார அனுபவித்ததால் தான் உங்க பின்னாடியே வந்தேன்... ஆனால் கோவிலில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும்ன்னு நான் நினைச்சு கூட பாக்கல... நீங்களே யோசிச்சு பாருங்க நான் மட்டும் தானே கோயில் க்கு போனேன்.. நீங்க தனியா தானே வந்தீங்க... முறைக்காதீங்க... சரி சரி நடந்தது நடந்துடுது இந்த சமயத்தில் நம்ப எதையும் பேச வேண்டாம் நீங்க படுங்க நாளைக்கு பொழுது நல்லபடியா விடியட்டும்
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...