63முடிவை நோக்கி

138 23 6
                                    

சந்திரனை சேர்த்து இருக்கும் மருத்துவமனையில் இருந்து வருத்தமாக சென்ற திரு பேசிய வார்த்தைகள் அனைத்தையும் எண்ணிப் பார்த்த அமுதா கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருக்க

பாண்டியன் - இப்போ எதுக்காக நீ அழுதுகிட்டு இருக்க

அமுதா - ஏங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா....

பாண்டியன் - அப்படி மனசாட்சி இல்லாமல் நான் என்ன பண்ணிட்டேன்

அமுதா - ஏங்க அவன் தான் நம்மளுடைய சொத்து வேணாம் சுகம் வேண்டாம் என்று ஒதுங்கி போயிட்டானே அவனுக்கு போன் வந்ததும் நீங்க என்ன பண்ணி இருக்கணும்.... அந்த போன்ல ஒழுங்கா என்ன விவரம் என்று கேட்டு பேசி இருக்கணும் தானே... போயும் போயும் சின்ன பிள்ளைத்தனமா இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருக்கீங்களே..  ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து அந்த பொண்ணு தமிழின் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு இருந்தால் வம்சா வம்சத்துக்கும் அந்த பாவம் நம் குடும்பத்தை தானே சேரும்... ஏங்க நீங்க இவ்வளவு கெட்டவரா மாறிட்டீங்க...

பாண்டியன் - நானா மாறல நீதான் என்ன மாத்திட்ட...

அமுதா - அப்படி நான் என்னங்க தப்பு பண்ணேன்..என்னைக்கோ செத்துப்போன என்னுடைய தம்பி உயிரோட வந்துட்டான்னு என் அப்பா சொல்லும் பொழுது நான் அவங்கிட்ட அன்பாகவும் பாசமாகவும் இருக்கிறது தப்பா....ஏன் நீங்க என்னுடைய அன்பை இப்படி உதாசீனப்படுத்துறீங்க...நான் தெரியாம தான் கேட்கிறேன் இதே உங்க தங்கச்சி  இருக்காளே அவளுக்கு ஒன்றுனா நீங்க துடிச்சு போறீங்களே, அதே மாதிரி தானே என் தம்பிக்கு ஏதாவது ஒன்னுனா எனக்கு துடிக்கும்

பாண்டியன் - ஏய் நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன் அவன உன்னுடைய தம்பின்னு சொல்லாத... எதை வச்சு அவனை நீ உன்னுடைய தம்பின்னு சொல்ற..

அமுதா - எனக்கு தெரியும்ங்க என்னுடைய தம்பி அவனு எனக்கு தெரியும்... அத நீங்க நம்பனும்னு அவசியம் இல்ல

பாண்டியன் - இங்க பார்..நீயும் உங்க அப்பாவும் உன் தம்பின்னு சொல்றியே இந்த திரு அழகன் மூணு பேரும் சேர்ந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சொல்லுங்க அதுக்கப்புறம் வாய் நிறைய அவன மச்சானு நானு ஏற்றுக்கொள்கிறேன்....அதை விட்டுட்டு போற வரவனை எல்லாம் தம்பி தொம்பின்னு சொன்னினா என்னால அத ஏத்துக்க முடியாது...

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now