42வாழறதே உனக்காக தான் வாழ்த்துக்கா பஞ்சம்

160 24 23
                                    

தமிழ் - என்னடா என்ன இந்த நேரத்துல call பண்ணி இருக்க

வேந்தன் - அக்கா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா

தமிழ் - என்னது பிறந்தநாளா....யாருக்கு என்னக்கா

வேந்தன் - உனக்கு தான் பிறந்தநாள்.... என்ன மறந்துட்டியா...

தமிழ் - ஐயோ ஆமா இல்ல.. நான் சுத்தமா மறந்துட்டேன்..தேங்க்ஸ் டா தம்பி

வேந்தன் - உன்னுடைய போனுக்கு நான் ரொம்ப நேரமா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்... நீ போன் எடுக்கல அதனால தான் உன்னோட அவக நம்பருக்கு போன் பண்ணேன்...

தமிழ் - இல்லடா என் போன்ல சார்ஜ் இல்ல அதனால ஆப் ஆயிடுது போல சரி நீ இன்னும் தூங்கலையா

வேந்தன் - என்ன அக்கா நீ....வருஷ வருஷம் நான் தானே முதல் ஆளா உனக்கு வாழ்த்து சொல்லுவேன் அதனால தான் இன்னைக்கும் உனக்கு நானே முதல் ஆளா வாழ்த்து சொன்னேன்

தமிழ் - ரொம்ப நன்றி டா

வேந்தன் - சரி உனக்கு இந்த வருஷம் உன் பிறந்தநாளுக்கு என்ன வேணும்

தமிழ் - எனக்கு என்னடா வேணும் கடவுள் கருணையில எனக்கு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருக்கு அது மட்டும் போதும்

வேந்தன் - சரி அக்கா நாளைக்கு நான் உன்னை வந்து வீட்டில் பார்க்கவா

தமிழ் - என்ன கேள்வி... வந்து பாரு

வேந்தன் - நீ தானே இனிமே வீட்டுக்கு எல்லாம் வரக்கூடாதுன்னு சொன்ன

தமிழ் - அடப்பாவி நான் எப்படா சொன்னேன்....கண்டிப்பா நாளைக்கு வா

வேந்தன் - சரி அக்கா இன்னொரு முறை உனக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் போனை வச்சுடறேன்

என்று சொன்ன வேந்தன் கைபேசி அழைப்பை துண்டிக்க...... திரு தமிழையே பார்த்துக் கொண்டிருக்க

தமிழ் - என்ன அப்படி பாக்கறீங்க

திரு - என்னங்க இன்னைக்கு உங்களுக்கு பிறந்த நாளா

தமிழ் - இன்னைக்கு இல்ல...நாளைக்கு.. ஆனா மணி 12 ஆயிடுது இல்ல அதான் என் தம்பி முதல் ஆளா வாழ்த்து சொல்றான்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now