🔱யின்
💜All in All அழகினின் அழகி இவள்💜❤அத்தியாயம்.. 52
தமிழ் திருவின் சட்டை காலரை பிடித்து தன் வசம் அனைத்து .... அவன் மீசையை முறுக்கி விட்டவள்
தமிழ் - அதாவது என் தையல் கடை தேங்கா மச்சான்...புது புடவை வாங்கி என் தம்பி பெயரை போட்டு அனுப்பிய நீங்க...இந்த வடிவேல் சொல்ற மாதிரி மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே..
என்று தமிழ் சொன்னவள் திருவின் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைக்க... திருவின் விழிகள் திருத்திருவென தாளம் போட..
திரு - என்ன உளறுறீங்க.....
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே இது உங்க தம்பி உங்களுக்காக ஆசை ஆசையா வாங்கி அனுப்பி இருக்காரு அதனாலதான் நீங்களும் அதை தட்டாமல் எடுத்து கட்டிக்கிட்டு இந்த தீபாவளியை என் கூட சந்தோஷமா கொண்டாடுனீங்கதமிழ் - என் திருவுக்கு பொய் எல்லாம் சொல்லத் தெரியாது என்று தான் இதுநாள் வரை நம்பினேன் ஆனால் பரவாயில்லை நல்லாதான் பொய் சொல்றீங்க...ஆனா அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டிங்க ன்னு தெரிஞ்சுக்கோங்க
திரு - எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்
தமிழ் - அதாங்க பொய் சொல்றதுக்கு
திரு - நான் ஏங்க உங்ககிட்ட பொய் சொல்ல போறேன்
தமிழ் - போதும் திரு அந்தப் பையன் நம் வீட்டு வாசல் கதவை தட்டும் பொழுது நானும் வேந்தன் தான் வந்திருப்பான் என்று நினைத்து போய் கதவை திறந்தது என்னமோ உண்மைதான்...ஆனால் அந்த பையனை பார்த்ததும் நான் தெரிஞ்சுக்கிட்டேன்....அந்தப் பையன் நம்ம கடைக்கு எதிர்க்க கடையில் வேலை செய்யற பையன்....அப்பவே உங்க குட்டு எனக்கு தெரிஞ்சிருச்சு...சரி இன்னும் நீங்க என்னெல்லாம் பண்ணி வச்சிருக்கீங்கன்னு பாக்குறதுக்காக தான் அவன் கொடுத்த பார்சலை நான் வாங்கினேன்... அதுல நீங்க என்னுடைய பெயரை தமிழ் அழகின்னு எழுதி இருக்கீங்க.... என்னுடைய தம்பி வேந்தன் என்னை தமிழ் என்று மட்டும் தான் கூப்பிடுவான்... இரண்டாவது அதுலேயே தெரிஞ்சிருச்சு நீங்கதான் அந்த பார்சலை அனுப்பி இருப்பீங்கன்னு.... மூணாவது அல்டிமேட்...
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...