17காலாவதி ஆன பிறகு தான் காதல் போல

163 26 13
                                    

🔱யின்
❤All in All
❤அழகனின் அழகி❤

❤பாகம் 17

திரு அழகன் போகும் வழியில் அவன் வண்டியை ஒரு சிறுவன் வழி மறிக்க...

திரு : யாரு பா நீ என்ன வேனும்...

சிறுவன் : அங்க அங்க தாத்தா ......

என்று அந்த சிறுவன் சொன்னதும் அழகன் அந்த சிறுவன் கை காட்டிய இடத்தை நோக்கி செல்ல..

திரு : நீங்களா ஐயோ என்னாச்சு சார்

சிறுவன் : தாத்தாவுக்கு நெஞ்சு வலிக்குதாம்...யாருமே இந்த தெருவுல இல்ல எங்க தாத்தாவை காப்பாத்துங்க

திரு : ஆட்டோ....

அனு : திரு என்னப்பா இங்க...

திரு : நீதானா அக்கா....நல்லதா போச்சு இவர ஹாஸ்பிடலுக்கு அழைச்சுகிட்டு போகனும் கொஞ்சம் ஆட்டோ எடு...

அனு : யாரு இவரு...உனக்கு தெரிந்தவரா

திரு : ஆமா அக்கா இவரு ரிட்டயர்டு கான்ஸ்டபிள் என் மனைவிக்கு அடி பட்டிருக்கும் போது இவருதான் காப்பாற்றினார்... சரி இதெல்லாம் பேச நேரமில்லை ஆட்டோ எடு...நான் வண்டியை ஓரம் நிறுத்திட்டு வரேன்

என்று சொல்லி தன் மனைவி தமிழ் அழகியின் மாங்கல்யத்தை சிலர் பறிக்க நினைக்க..... அப்போது தமிழழகி கீழே விழுந்து மயக்கம் அடைந்த நிலையில் இருந்த பொழுது அவளை மருத்துவமனையில் சேர்த்த ரிட்டயர்டு கான்ஸ்டபிள் சந்திரன் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு நடு வீதியில் விழுந்து இருந்த அவரையும் அவருடைய பேரனையும் திரு அழைத்துக்கொண்டு அனுராதாவின் ஆட்டோவில் ஏற்றிச் சென்றவன் மருத்துவமனை க்கு செல்ல....

திரு : அக்கா நீ கிளம்பு நான் பாத்துக்கிறேன்

அனு : இல்ல திரு நானும் வரேன் வா

என்று ஆட்டோ ஓட்டுநர் பெண்மணி அனு சொல்ல....இவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க...டாக்டர் பரிசோதித்த பிறகு அவருக்கு வந்திருப்பது mild attack என்று சொல்ல சந்திரனின் பேரன் அழுதுகொண்டு நின்று இருந்தவனை திரு சமாதானப்படுத்தும் வகையில் அவனை அருகில் அழைத்தவன்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now