தீயா வேலை செய்யணும் மாப்பிள

176 26 24
                                    

🔱யின்

❤All in All
❤அழகனின் அழகி இவள்❤
❤பாகம்...2️⃣9️⃣

திரு : நான் உங்க கிட்ட பேசணும்

தமிழ் : நான் உங்ககிட்ட பேச தயாரா இல்லன்னு சொன்னேன்

திரு : உங்களுக்கு இப்ப என்னங்க பிரச்சனை............ என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க ...

தமிழ் :

திரு : நம்ம வேணும்னா....

தமிழ் : புரில

திரு : நம்ம வேணும்னா விவாகரத்து........

திரு சொல்லி முடிப்பதற்குள்...திருவின் கன்னத்தில் ரமணி பாட்டி ஓங்கி ஒரு அறை விட...அதே சமயம் செல்வி வேந்தனை அழைத்து கொண்டு சமையல் அறைக்குள் நுழைய....
திரு கன்னம் பழுக்க... தமிழ் அதிர்ச்சியில் நின்றிருக்க திருவின் கண்கள் கலங்கியபடி ரமணி பாட்டியைப் பார்க்க

ரமணி : என்ன பேச்சு பேசற நீ இப்ப உங்களுக்குள்ள என்ன நடந்து போச்சுன்னு  விவாகரத்து அது இதுன்னு சொல்றே

திரு : இல்ல பாட்டி

ரமணி : வாய மூடு.. என்ன நானும் சரி சின்ன பிள்ளைங்க இன்னைக்கு சரி ஆயிடும் நாளைக்கு சரியாயிடும்ன்னு பார்த்தா ஒரு ஒரு நாளும் உங்க ரெண்டு பேருடைய பிரச்சனை அதிகரித்து கிட்டு தான் போகுது ...திருமண வாழ்க்கை ஒரு முறைதான் அதை சந்தோஷமா வாழ முடியல நாளும் இப்படி ஒரு பிரச்சனைல்ல கொண்டு வந்து நின்னுகிட்டு முழிக்காதீங்க

தமிழ் : பாட்டி

ரமணி :  வாய மூடு அழகி ...எனக்கு உன் மேலயும்  தான் கோபம் உன் புருஷன் இப்படி தான்னு உனக்கு நல்லா தெரியுது அப்படி தெரிந்தும் நீ அவனை ஏன் சீண்டிப் பார்க்கிற

தமிழ் : ஏன் பாட்டி நான் என்ன பண்ணேன் ... இவர் ஒரு ஒரு முறையும் என்னுடைய காதலை சந்தேகப் படும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு

ரமணி : ஆமா ...இவன் உன்னை கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்ததும் ஆசைப்பட்டான்..ஒரு வேல உனக்கு இவனை பிடிக்கலைனு நினைச்சு கேட்டு இருப்பான்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now