அவ்வளவு சீன் எல்லாம் இல்ல

137 24 7
                                    

🔱யின்
💕all in all அழகனின் அழகி இவள்💕

💕அத்தியாயம் 5️⃣6️⃣

" என்னுடைய சக்காளத்தி இவுங்க தானா... "

என்று ஒரு பெண்ணின் குரலைக் கேட்டதும்....செல்வி, தமிழ்,திரு ஆகிய மூவரும் வாசலை பார்க்க.

அமுதா - ஏய் என்ன நீ... அப்படி எல்லாம் பேச கூடாது... திருவுக்கு கல்யாணம் ஆகிடுது

என்று திருவின் அக்கா அமுதா தன் நாத்தனார் மகாவை பார்த்து சொல்ல.... மகா உரிமையாக வந்து திருவின் கைகளை பற்றியவள்

மகா - என்ன மாமா அப்படி பாக்குறீங்க... உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகலைனா நான் தான் உங்கள கல்யாணம் பண்ணி இருப்பேன்

என்று மீண்டும் மகா சொல்ல.... மகாவின் வயது 20..... அவள் டெல்லியில் படித்து கொண்டு இருக்கும் கல்லூரி மாணவி... திருவின் அக்கா கணவன் பாண்டியனின் உடன் பிறந்தவள் என்பது குறிப்பிட தக்கது.... இன்றிலிருந்து ஒரு வார நாட்கள் மகாவினால் ஏற்பட போகும் சில தேவை இல்லாத ஆணியை நோக்கியே கதை....

செல்வி - ஏங்க ஏங்க யாரு நீங்க முதல்ல என் மாமா மேல இருந்து கையை எடுங்க

மகா - hello who are you... திரு என் மாமா...

செல்வி - இதோடா.... ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரிட்டிய கதையா இல்ல இருக்கு

மகா - ஏய் யார பிடாரி சொல்ற

செல்வி - மாமா... என்ன நீங்க யாரோ ஒருத்தி உங்க கையை பிடிச்சிகிட்டு நிக்கிறா நீங்க அவகிட்ட கையை குடுத்துட்டு பே ன்னு நிக்குறிங்க...

மகா - ஏய் என்ன...யார வாடி போடி சொல்ற

செல்வி - உன்ன தான் டி... முதல்ல என் மாமா மேல இருந்து கையை எடு

மகா - அத நீ சொல்லாத... என் மாமா சொல்லட்டும்

சந்திரன் - அட என்னமாஇது சின்ன பிள்ளைங்க போல சண்டை போட்டுக்குறீங்க

அமுதா - மகா சும்மா இருக்க மாட்டியா

மகா - நீங்க சும்மா இருங்க அண்ணி... திரு மாமா பாக்க கருப்பா கலையா திரு திரு ன்னு முழிச்சிகிட்டு ரொம்ப அழகா இருக்காரு..

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Où les histoires vivent. Découvrez maintenant