முடிவின் தொடக்கம் நீயே 💙 16

340 10 5
                                    

கயல் அவள் நண்பர்களுடன் சென்றுவிட அஜய் அந்த இடத்தை விட்டு நகராமல் பிரம்மை பிடித்தது போல் நின்று கொண்டிருந்தான் ... எப்படி அவள் நண்பர்கள் கூப்பிட்டதும் என்னை மதிக்காமல் சென்று விட்டால் என்று எண்ணம் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.. நண்பன் கயல் விஷயத்தில் நிதானம் இழப்பது புதிதல்ல என்றது அறிந்து கொண்ட மதன் ... அஜய் நம்ம காலேஜ்ல இருக்கோம் வீட்டுக்கு போகலாமா என்றான் மெதுவாக...

அவன் அருகில் நெருக்கவே பயமாக இருந்தது ... அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தை பார்த்து சற்று தள்ளி நின்று தான் பேசிக் கொண்டிருந்தான்... நெருங்கினால் அவன் உடலில் அனல் தன் மேல் வீசும் அந்த அளவிற்கு கண்களில் நெருப்பை கக்கிக்கொண்டு கையை இறுக்கமாக மூடி நின்று கொண்டிருந்தான் அஜய்... மதனின் பேச்சு அவன் காதில் நுழையவே இல்லை ... வேகமாக தனது பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் ...

அவன் வேகத்திற்கு கண்டிப்பாக எங்காவது விழுந்த அடிபடுவது நிச்சயம் ... அதனால் மதன் அவன் பின்னாலே தனது வண்டியில் அஜயை பாலோ செய்து கொண்டிருந்தான் ... நேராக வீட்டிற்கு தான் சென்றான்... தன் அறையில் நுழைந்தவன் கதவை வேகமாக அடித்து சாத்தினான் ... ஆனால் தாள் போடவில்லை ... பின்னால் வந்த மதன் கதவை அடைத்துவிட்டு அவனிடம் பேசலாம் என்று பார்த்தால் அந்த அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி கொண்டிருந்தான் ...

அவன் கோபம் வரும்போது எல்லாம் அந்த அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறும் ... இது எப்பொழுதும் நிகழ்வது தான் ஆனால் சமீபகாலமாக அடிக்கடி கயலின் மீது காட்டப்படாத கோபத்தை இப்படி காட்டிக் கொண்டிருக்கிறான் ... பெருமை இழந்த மதன் அவன் கைகளை பிடித்து கன்னத்தில் ஒரு அறை வைத்தான் ... இப்ப என்ன நடந்துச்சுன்னு நீ பண்ணிட்டு இருக்க .. அந்த பொண்ணு வீட்டைல நடக்கிற ஒவ்வொரு பிரச்சனையும் உன்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்குமா ...

அவளே இப்பதான் உன்னை ஏத்துக்க முயற்சி பண்ணிட்டு இருக்கா.. இப்படியெல்லாம் பண்ணி நீ மேலும் மேலும் அவ்வளவு தூரமா தள்ளி நிக்க வைக்கிற டா ... உனக்கு ஏன் இந்த அளவு கயல் மேல பொசசிவ்னஸ் வருதுன்னு எனக்கு தெரியல ... ஆனா அது ரொம்ப ஆபத்து முடிஞ்சா என்ன பண்றது ... உங்க அப்பா பத்தி உனக்கு நல்லா தெரியும்ல ... அவருக்கு இந்த காதல் எல்லாம் விருப்பம் கிடையாதுன்னு...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ