முடிவின் தொடக்கம் நீயே 💙 53

398 11 0
                                    

" எங்கம்மா நீ போகணும் . ஏறினதிலிருந்து நீயும் அழுதுகிட்டே வர ஏதாவது பதில் பேசு " என ஆட்டோக்காரர் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கயலை பார்த்து கேட்டார் . அப்பொழுதுதான் சிந்தனைக்கு வந்தவள் அழுகையை நிறுத்தி விட்டு " மன்னிச்சிடுங்க அண்ணா . எவ்வளவு கொடுக்கணும் ஆட்டோவுக்கு " என்றாள் .

" சரிதான் போ . 200 ரூபாய் குடும்மா‌ " என வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் . எங்கே இறங்கினோம் என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை . அவர் இறக்கி விட்ட இடத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தவள் நடந்து கொண்டே இருந்தாள் . அவளுக்காக பூர்வி கொடுத்த சிகப்பு நிற வெல்வெட் சாரி கழுத்தில் அதற்கு ஏற்ப ரூபி நகை அணிந்து கொண்டு தெருவில் நடந்து வந்தவளை பார்த்த திருடன் ஒருவன் அவள் பின்னாலே வந்து கொண்டிருந்தது அவளுக்கு தெரியவே இல்லை .

அவன் நகையை எல்லாம் கழட்டி சென்றிருந்தால் கூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பே கிடையாது . அவளையே தொடர்ந்து வந்தவன் அவள் வழியை மறைக்க நிமிர்ந்து பார்த்தவளுக்கு கர்சிப் முகத்தில் கட்டிக்கொண்டு நின்றவனை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது . உடனே பின்னால் நகர அவள் கையைப் பிடித்து கத்தியை நீட்டியவன் " ஒழுங்கு மரியாதையா எல்லா நகையும் கழட்டி கொடுத்துடு‌" என மிரட்டினான் . எங்கு சென்றாலும் தனக்கு நிம்மதியே இல்லையா என வெறுத்துப் போய் அவனிடமிருந்து விடுபட முயன்றாள் .

யாரோ அந்த பக்கம் செல்லும் ஒருவர் சரியாக பின் இருந்து கட்டையால் அந்த திருடனை அடித்து விட்டார் . அவரின் கையில் சிக்காமல் தப்பி ஓடிய திருடன் தூரம் மறையும் வரை நின்று பார்த்தவர் "என்ன பொண்ணு மா நீ . ஒருத்தவன் பின்னாடி வந்து கழுத்துல கத்தி வைக்கிற வரைக்கும் புரியாம நீ பாட்டுக்கும் நடந்து போற . நானும் ரொம்ப தூரமா பாத்துகிட்டு தான் வரேன் . இருந்தாலும் என்ன ஏதுன்னு தெரியாம கேட்க முடியாதுன்னு தான் தூரமா வந்துட்டு இருந்தேன் . வயித்து பிள்ளைதாட்சியாக இருந்துகிட்டு நைட் நேரத்தில் தனியாக வரலாமா . உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லு நான் கொண்டு போய் விடுகிறேன் " என்றவர் அவள் கண்ணுக்கு கடவுள் போல தெரிந்தார்‌ .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Onde histórias criam vida. Descubra agora