முடிவின் தொடக்கம் நீயே 💙 23

296 10 0
                                    

கயல் இத்தனை நாட்களில் அஜயை மறந்து விட்டு தன் மனதை நார்மலாக இருக்கும்படி தயார் செய்து வைத்திருந்தாள் ... ஆனால் இன்று அவள் எதிரே கையை கட்டி அவளின் சாக்லேட்டை பிடுங்கிக்கொண்டு முறைத்தபடி நிற்பவனை பார்த்து கடுப்பாக வந்தது ... இவனெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான் .. இதுல உடம்போட ஓட்டின மாதிரி ஒரு சட்டை வேற ...

துணியை எடுத்து உடம்போட வச்சு தச்சிட்டான் போல என்று மனதிற்குள் திட்டியவள் .. அவனின் அழகை கண்களால் இரு வினாடி ஸ்கேன் செய்து விட்டு வெறுப்பதை போல் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள காஃபி ஷாப் உள்ளே சென்றாள்... அவளை தொடர்ந்து அவள் நண்பர்களும் செல்ல அஜய் அவர்களை பின் தொடர்ந்தான்.. ஹலோ சீனியர் எங்க ஞாபகம் வந்துட்டா என்று பிரபா கேட்க ..

அவர் வேற ஏதாவது வேலை விஷயமா காலேஜ் வந்து இருப்பாரு.. நம்மள பார்க்க இல்ல வாங்க போகலாம் என்று பாலா கூப்பிட ... அதான என்ன வெட்டி பேச்சு இவருகிட்ட வாங்க போகலாம் என்று வினோத் காபி ஆர்டர் செய்ய... லாவண்யா இவர்கள் பேச்சு புரியாமல் திருத்திருவென விழித்தால் ... அடியே பைத்தியக்காரி கூப்பிட்டா வரணும் என்று லாவண்யாவை பிடித்து இழுத்த வினோத் அஜயை முறைத்துக் கொண்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினான்....

ஏன் டா கொஞ்சம் வருத்தமும் அமைதியாக இருந்தா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே.. ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கேன்.. எப்படி இருக்கேன் என்னன்னு கூட கேட்காமல் நீங்க பாட்டுக்கு போறீங்க என்று அவன் கேட்டதும்... எதுக்காக கேக்கணும்.. இவ்ளோ நாள் எங்களை பத்தி மறந்துட்டு இருந்தவங்க தானே நீங்க ... உங்க கிட்ட பேச மாட்டோம் என்றான் பாலா கோவமாக...

டேய் எவ்வளவு வேலை தெரியுமா எனக்கு.. இதெல்லாம் சின்ன பசங்க உங்களுக்கு சொன்னா புரியாதுடா ... இப்ப நானும் ஒரு பிசினெஸ்மேன் என்று அவன் கூறியதும் .. ஆமா பொல்லாத பிசினெஸ்.. எங்களை விட ரொம்ப முக்கியமான பிசினெஸ்... போங்க சீனியர் என்று குழந்தை போல் கோபப்பட்டான் வினோத்.. சரி இனிமே முடிந்த அளவுக்கு உங்க கிட்ட பேசவும் உங்கள பார்க்கவும் ட்ரை பண்றேன் என்றான் பொறுமையாக ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Donde viven las historias. Descúbrelo ahora