முடிவின் தொடக்கம் நீயே 💙 19

352 10 3
                                    

என்னடா இந்த மேடம் நாளைக்கு டெஸ்ட்-ன்னு சொல்லிட்டு போறாங்க ... எப்படி படிக்கிறது என்று நோட்டை திருப்பிக் கொண்டு லாவண்யா கேட்க ... எப்படியும் நாளைக்கு நாமெல்லாம் கிளாஸ் வாசல் நிக்க போறோம் ... அப்போ என்னென்ன சாப்பிடலாம்னு ஒரு லிஸ்ட் போடுங்க... வாங்கிட்டு வந்து வச்சுக்கலாம் என்று வினோத் கூறியதும் ... என் இனம் அடா நீ என்று கயல் வினோத்தின் கையை குலுக்கினால் ...

அந்த ஈர வெங்காயம் எல்லாம் தேவையே இல்ல... இன்னைக்கு சாயங்காலம் அஜய் அண்ணன் கால்ல விழுந்து எப்படியாவது படிச்சிட்டு நாளைக்கு எழுதிக்கலாம்... என்ன சொல்றீங்க என்று பிரபா கேட்டதும்... படிக்கிறது பத்தி எல்லாம் இவ பேசுற நினைக்கும் போது எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்குடா என்று பாலாஜி பொய்யாக வருத்தப்பட... எனக்கும் அதே தான் தோணுது .. வரவர எனக்கு என்ன தோணுதுனா... நம்ம கேங்குக்கு இவ தேவையா என்று பிரபாவை காட்டி லாவண்யா கேட்டதும் ...

அடியே கேங் லீடர் கிட்டயே இந்த பேச்சா என்று அவள் தலையிலேயே கொட்டியவள்... ஃபாலோ மீ என்று பாட்ஷா பட ரஜினி போல் கேண்டினை நோக்கி சென்றாள்....பின்னாலே மற்ற வானரங்கள் அவள் கேண்டின் செல்வதை பார்த்து ஐ சோறு சாமி ... சோறு சாமி .. சோறு என்று நால்வரும் கேண்டினை நோக்கி ஆனந்தமாக ஓடினர்... அங்கு அஜையும் மதனிடம் கெஞ்சி கொண்டே கேண்டினுக்கு தான் வந்தான் ...

அவர்கள் இருவரும் பேசாமல் இருப்பதை பார்த்து அவர்களுக்குள் ஏதோ சண்டை என்று உணர்ந்த ஐவரும் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் ...என்னடி எப்போதும் லவ்வர்ஸ் மாதிரி ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே திரிவாங்க... இன்னைக்கு ஏதோ சண்டை போல லாவண்யா கேட்டதும் ... அதானே ஏதோ லவ் பண்ணுற பொண்ணு கோச்சிக்கிட்டதுக்காக லவ்வர் பாய் சமாதானப்படுத்துவாங்களே...

என் கண்ணுக்கு அதே மாதிரி தோணுது என்று சிரித்தான் பாலாஜி... இவர்கள் அலப்பறை கேட்காமல் கயல் உன்னிப்பாக அவர்களே பார்த்துக்கொண்டிருக்க ....
பாலாஜி கயலை யோசனையாக பார்த்தவன்.. ஆமா கயல் உனக்கு rugged boy பிடிக்குமா இல்ல சாக்கோ பாய் பிடிக்குமா என்று கேட்க ... அவள் அஜய் மற்றும் மதனை பார்த்துக் கொண்டே எனக்கு நம்ப தெருவுல பிரியாணி போடுற ரஹீம் பாய் தான் டா பிடிக்கும் ... அவரோட ஆல் டைம் ஃபேன் நான் என்றால் அவனை கேள்வியை உணராமல்.... அவள் பதிலில் நால்வரும் வெடித்து சிரித்தனர்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 حيث تعيش القصص. اكتشف الآن