முடிவின் தொடக்கம் நீயே 5 💙

474 15 2
                                    

இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது எப்பொழுதெல்லாம் கயல் அஜயுடன் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டால் ... அவள் சீனியர் சீனியர் என்று பேச அவனும் முழு நேரமும் கயல் என்று பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தான்... பிரபா லாவண்யா இருவரும் ஏன் டி தினேஷ் கழட்டி விட்டுட்டு எப்போ அஜயா என்று நேரடியாக கலாய்க்க... சீனியர் டி ஜஸ்ட் பிரண்ட்ஸ் என்று சிரித்து கொள்வாள்...

இருவரும் தனித்துவமாகவே தெரிந்தனர் மற்றவர்கள் கண்ணுக்கு ...மதனிடம் அவள் சிறு சிறு அசைவுகள் ,பேச்சு என அனைத்தையும் சொல்லி புலம்புவான்... லவ் பண்றவங்க கிட்ட மட்டும் பிரண்டா இருக்க கூடாது டா... அந்த வசனம் அப்ப தலைவர் சொன்னது எனக்கு இப்பதான் புரியுது என்று அவன் வாய் விட்டே புலம்புவான் ...

தினேஷுக்கு கயல் அஜயுடன் பழகுவது பிடிக்காமல் இருந்தபோதிலும் அவர்கள் நட்பு ஏரியாக பழகுகிறார்கள் என்பதற்காகவே விட்டு வைத்தான்... இரண்டு நாள் விடுமுறை வருவதால் ஆசிரியர்கள் நிறைய அசிமெண்ட் கொடுத்து விட்டார்கள் என்ஜாய் பண்ணி விட மாட்டாங்களே என்று கயல் வகுப்பு முழுவதும் புலம்பினார்கள்...

அஜய் கயலுக்காக எப்போதும் காத்திருக்கும் மரத்துக்கு அடியில் மதனுடன் அமர்ந்திருந்தான்... முதலில் வந்தது பிரபா தான்... என்னம்மா மிளகாய் பஜ்ஜி கயல் எங்கே என்று கேட்க ...யோவ் சீனியர் என்று பார்க்கிறேன் இல்ல மண்டையிலே வகுந்திடுவேன் என்று அவனை விரல் நீட்டி எச்சரித்தவள் ...

அஜயிடம் திரும்பி உங்களை கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னா கயல்... அவளுக்கு லேப்ல முக்கியமா வேலை இருக்கு என்று அவள் சென்று விட.... என்ன வாய் இவளுக்கு என்று மதன் பிரபாவை திட்டிக் கொண்டான்... அஜய் மதனிடம் ஏன்டா அந்த பொண்ணு கிட்ட மட்டும் வம்பு இழுக்குற என்று கேட்க ...இல்ல மச்சான் இவளை பார்த்தாலே கலாய்க்க தோணுது என்று சொல்ல ...

அவதான் உன்னை கலாய்கிறா நீ எங்க அவளை கலாய்ச்ச என்று கூறும் நண்பனை போலி கண்ணீர் துடைத்துக் கொண்டு போடா என்று திரும்பி அமர்ந்து கொண்டான் ...பிரபா வேகமாக மாடிப்படிகள் ஏறி லேபருக்கு சென்றால்... அடியே வயசான காலத்துல ஏண்டி என்ன படி ஏற விடுற என்று கேட்க... கயலோ எனக்கு ஏறி இறங்கினால் கால் நடுங்குது ரொம்ப வயசாயிடுச்சு.... அதனாலதான் உன்னை அனுப்பினேன்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Onde histórias criam vida. Descubra agora