முடிவின் தொடக்கம் நீயே 💙 60

395 13 3
                                    

" ஊரு உலகத்தில இருக்குற எவனும் இப்படி கேட்க மாட்டான் . பூமிவாசி பைத்தியம் " தலையில் அடித்தபடி மதன் புலம்பிக் கொண்டிருக்க கயலை எப்படி தன்னுடன் அழைத்து செல்வது என யோசித்தான் அஜய் . " ஒரு ஐடியா கூட உருப்படியா வரலை . மச்சான் நீங்க ஏதாவது ஐடியா சொல்லுங்க . மாமா அத்தை நீங்க கூட சொல்லலாம்" என்று அஜய் சொல்ல " தம்பி இது உங்க பிரச்சினை . மூளையை கசக்கி தீர்வு நீங்கதான் பண்ணனும் " என்றாள் சௌந்தர்யா .

" மூளை இருந்தா என் நண்பன் ஏன் நம்ம கிட்ட கேட்க போறான் " மதன் சிரிக்க மற்ற அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர் . எழுந்ததிலிருந்து அஜய் அடிக்கும் அலப்பறை அப்படி . " டேய் தம்பிகாரு . உன்னை யாரு டா வீட்டுகுள்ள விட்டாங்க . தலையில எந்த கடையில வாங்கின பிரசாதம் " வீட்டிற்குள் நுழைந்து கொண்டே ராகுல் கலாய்க்க அவனை முடிந்த வரை முறைத்தான் அஜய் . " வந்த விஷயத்தை மட்டும் பேசுங்க " என்று பூர்வி வலியுறுத்த அவளை பார்த்து புன்னகைத்தான் அஜய் .

அவனை கண்டு கொள்ளவே இல்லை அவள் . " அண்ணி நான் தான் நடந்த எல்லா பிரச்சினையையும் ஆதாரத்தோடு நிரூபிச்சிட்டனே . இன்னமும் என் மேல உள்ள கோபம் போகவே இல்லயா உங்களுக்கு " வருத்தத்துடன் அஜய் கேட்க " ஈசியா மறக்கும் அளவுக்கு எதையுமே நீ பண்ணலை அஜய் . பொண்ணுங்க நாங்க எல்லாம் ரொம்ப சாஃப்டானவங்க . அதே சமயம் கண்ணாடி போல நீங்க எது எங்களுக்கு கொடுக்குறீங்களோ அதே தான் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் . நீ கொடுத்து வலியை அவ எப்போ மறந்து‌ போறாலோ அப்ப கயல் உன்னை தேடி வருவா . அதுவரைக்கும் நீ அவ கிட்ட உன்னோட மன்னிப்பு கேட்டுக்கிட்டே இரு .‌ இது தான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும் " என்று அவனிடம் கூறியவள் ராகுலை பார்க்க " அத்தை மாமா உங்க ரெண்டு பேரையும் தான் பேச வந்தேன் . என் தம்பி பண்ண எந்த விஷயமும் நாங்க ஆதரிக்கலை . எங்க அப்பாவையும் நான் இந்த விஷயத்தில மன்னிக்க மாட்டேன் . என் தம்பிக்கும் அப்பாவுக்கும் எனது நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் அதையும் நான் தடுக்க மாட்டேன் . அம்மா கயல் வந்ததுல இருந்து உடைஞ்சு போயிட்டாங்க ‌. உடம்பு சரியில்லை. அவங்க கிட்ட மட்டும் போன் பண்ணி பேச சொல்லுங்க . கயல் கிட்ட இப்ப பேச முடியுமா " என்று ராகுல் கேட்டதும் " தாராளமா நீங்க பேசலாம் . இருங்க நானே கூப்பிடுறேன் " என்று உடனே கயல் அறைக்கு சென்று அழைத்து வந்தார் மோகன் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now