முடிவின் தொடக்கம் நீயே 💙 3

631 17 2
                                    

கயல்விழி பிரபா லாவண்யா மூன்று பேரும் இன்றைய வகுப்பிற்கு ஆசிரியர் கொடுத்த பாடத்தை படிக்காமல் வந்ததால் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஆண்டவன் மீது பாரத்தை போட்டு அமர்ந்திருந்தனர்... அவர்கள் நேரமா என்னமோ இன்று முதல் வகுப்பு லட்சுமி உள்ளே நுழைந்தார்...

என்னடி அந்த ரப்பர் வாயன் வருவான் என்று பார்த்தால் லட்சு வருது என்று பிரபா சொல்ல... அமைதியா இருடி எதாவது படிப்ஸ் எந்திரிச்சு டெஸ்ட் இருக்குன்னு சொல்லிட்டு அவ்வளவுதான் என்று மெலிதாக பிரபாவின் காதில் முனுமுனுத்தால் லாவண்யா... அடியே ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க அவங்க நம்மளை தான் பாக்குறாங்க என்று கயல் சொன்னவுடன் வாயை மூடிவிட்டனர்...

நேத்து முதல் நாள் அப்படின்னு பாடம் நடத்தல அதனால் இன்னைக்கு கொஞ்சம் நடத்தலாமா என்று கேட்டுவிட்டு இன்றைய வகுப்பை ஆரம்பித்து விட வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது ...அன்று மதிய வகுப்பு வரை அனைத்து ஆசிரியர்களும் அதே போல் பாடம் எடுத்து கொண்டே இருக்க 12 மணிக்கு மேல் மூன்று வானரங்களும் பசி கொடுமையினால் வாட தொடங்கி விட்டார்கள்...

இந்த வகுப்பு முடிந்ததும் கடவுளுக்கு நன்றி கூறியவர்கள் கேண்டினை நோக்கி வேகமாக ஓடினார்கள் ...வடிவேலு காமெடி வருவது போல் கடவுளே உன் புள்ள வேகமாக ஓடுது குறுக்க மணல் லாரி பஸ் வராமல் பார்த்துக்கொள் என்று சொல்வது போல் அவர்களுக்கான ஒரு இடத்தை தேடி பிடித்து சாப்பாடு சாப்பிட ஆரம்பித்தார்கள்...

இதையெல்லாம் அவர்கள் வகுப்பில் இருந்து வெளியே வந்ததிலிருந்து அவர்கள் கேண்டினில் அமர்ந்து பசியில் வேகமாக உண்ணுவதை பார்த்து அஜய் சிரித்துக் கொண்டிருக்க மதனும் நல்லா சாப்பாட்டு ராமிகிளா இருக்கும் போல என்று அவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு தனது நண்பனை திரும்பிப் பார்த்தான்...

எவ்வளவு கேவலமா இருந்தாலும் காதலிக்கும் போது கண்ணுக்கு எல்லாம் அழகா தெரியும் போல.. நமக்கு அந்த கொடுப்பினை இருக்கவோ இல்லையோ என்று வானத்தைப் பார்த்து கூறியவன்... அதான் உன் ஆள பாத்துட்டு இல்ல வா எனக்கும் பசிக்குது நீ அவளை பாரு நான் சாப்பிடுறேன் என்று அவனையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Donde viven las historias. Descúbrelo ahora