பகுதி-4

210 9 0
                                    

அன்று இரவு பிரசன்னா யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தான், தான் அணிந்திருந்த காலணியை கையில் பிடித்து கொண்டு தனது அறை நோக்கி ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்து நடந்து முதல் படிக்கட்டில் காலை வைத்தான்.

அப்போது, "நடுராத்திரி 12.45 வரைக்கும் எங்கடா ஊர் சுத்திட்டு வர்ற?" என்று கேட்டவாறு பொதுவறையின் எல்லா விலக்குகளையும் போட்டார் மகாலட்சுமி.

"நான் தான் சொன்னேனேம்மா, என் friendஓட birthday partyன்னு, அவன் வீட்ல இருந்து தான் வர்றேன்," என்று சொன்னான் பிரசன்னா.

"அதுக்காக நடுராத்திரி வரைக்கும் அவன் வீட்லயே இருக்க உனக்கு நான் permission எதுவும் குடுக்கலையே?" என்று கேட்டார் மகாலட்சுமி.

"நீ எதுக்கு தான் அவனுக்கு permission குடுத்த இதுக்கு குடுக்க?" என்று கேட்டுக் கொண்டே தனது மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டே தன் அறையை விட்டு வெளியே வந்தார் ரங்கநாதன்.

"இவன் அண்ணன் சுபாஷ் நான் சொல்ற மாதிரி கேட்டு நடந்துகிட்டதனால தான் இப்ப Americaல நல்ல உத்தியோகத்துல நல்லபடியா இருக்கான்," என்று தன் மூத்த மகனை பற்றி பெருமையடித்து கொண்டார் மகாலட்சுமி.

"அவன் அங்க என்னென்ன கூத்தடிக்கிறான்னு எனக்கு தான தெரியும், கூடிய சீக்கிரம் வெள்ளைக்கார பொண்டாட்டியோட வந்து நிப்பான், அப்பதான் உங்களுக்கு என் அருமை புரியும்," என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்தான் பிரசன்னா.

"என்னடா அங்க வாய்க்குள்ளேயே மொனங்குற?" என்று கேட்டார் மகாலட்சுமி.

"ஒன்னும் இல்லையே, நான் என்ன சொல்ல போறேன், நான் சொல்றதெல்லாம் கூட காதுல வாங்குறிங்கன்னு நெனைக்கும் போது மனசு குளுந்து போச்சு," என்று சொன்னான் பிரசன்னா ‌

"அதிகம் பேசத போய் தூங்குற வழிய பாரு, வயசு 25 ஆகுது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை," என்று சாடினார் மகாலட்சுமி.

பிரசன்னா அங்கிருந்து நகர்ந்தான், "நீ அவன்கிட்ட ரொம்ப கண்டிப்பா இருக்குறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல மகா, அவன் வயசு பசங்கல்லாம் எப்படில்லாமோ கெட்டு சீரழியுறானுங்க, நம்ம பிரசன்னா என்ன அப்படியா இருக்கான்? நல்லா படிச்சிருக்கான், cityலயே பெரிய lawyerகிட்ட juniorஆ work பண்றான், இதைவிட நமக்கு வேற என்ன வேணும்? என்னைக்காவது ஒரு நாள் அவன்கிட்ட கொஞ்சம் அன்பா அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசுனா அவன் மனசுக்கும் சந்தோஷமா இருக்கும்," என்றார் ரங்கநாதன்.

உன்னருகில் நானிருந்தால் IINơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ