நிறைவுப் பகுதி

240 9 0
                                    

மூன்று வருடங்களுக்கு பிறகு...

"என்னங்கடா இப்படி மசமசன்னு நின்னுகிட்டே இருக்கீங்க, Doctor அந்த injectionஅ வாங்கிட்டு வர சொல்லி எவ்வளவு நேரமாகுது," என்று சொன்னார் ரங்கநாதன்.

"Injection வாங்கி nurseகிட்ட குடுத்தாச்சு, அப்பாவாக போற உங்க பையனே அங்க coolஆ game விளையாடிட்டு இருக்கான், நீங்க என்னமோ குட்டி போட போற பூனை மாதிரி அங்கயும், இங்கயும் அலையிறீங்க," என்றான் விக்டர்.

சில மாதங்கள் வரை மனைவி மற்றும் மகன்களை விட்டு தூரமாக இருந்த ரங்கநாதன், வயதான காலத்தில் தனிமையை உணர்ந்தார். மகாலட்சுமி விக்டரின் வீட்டிற்கு சென்ற இரண்டு மூன்று நாட்களில் சுபாஷ் மீண்டும் America சென்றான். விஷாலும் ரங்கநாதனிடம் அதிகமாக பேசிக் கொள்வதில்லை.

அதன்பின் ரங்கநாதன் தானே சென்று மகாலட்சுமியை சமாதானம் செய்து, பிரசன்னா எப்படிபட்டவனாக இருந்தாலும் அவன் தன் மகன் தான் அவனை தானே ஒதுக்கினால், வேறு எவர் அவனை ஏற்றுக் கொள்வார் என்று சொல்லி அனைவரையும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்தார்.

அந்த நாளில் இருந்து விக்டர், பிரசன்னா, லாவண்யா மற்றும் சந்திரிகா அனைவரும் ரங்கநாதனுடனும், மகாலட்சுமியுடனும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.

பிரசன்னா ஒரு ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கை வாதாடி ஜெயித்த பின் தனியே நின்று வாதாடும் அளவிற்கு உயர்ந்து விட்டான். இப்போது அவன் ஒரு பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர் ஆகிவிட்டான்.

விக்டர் இப்போது அவன் வேலை பார்க்கும் அதே விளம்பர Agencyஇல் General Managerஆக பதவி உயர்வு பெற்றிருந்தான்.

சந்திரிகா இப்போது பதவி உயர்வு பெற்று காவல் கண்காணிப்பாளராகி இருந்தாள்.

லாவண்யா தான் பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருந்து பெருகி வரும் அவர்களது குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவியாக மாறி விட்டாள்.

உன்னருகில் நானிருந்தால் IIOù les histoires vivent. Découvrez maintenant