பகுதி-18

148 6 0
                                    

"நீங்க ரெண்டு பேரும் விருப்ப பட்டோ படாமலோ come out ஆயாச்சு, but எங்க ரெண்டு பேரோட situation அப்படி இல்லையே, இப்ப இல்லன்னாலும் இன்னும் ஒரு வருஷத்துலயோ இல்லை ரெண்டு வருஷத்துலயோ, வற்புறுத்தியோ இல்லை எங்கள மிரட்டியோ கல்யாணம் பண்ணி வச்சே தீருவாங்க, இந்த societyஓட structureஉம் அந்த மாதிரி தான் இருக்கு, அப்படி யாருன்னே தெரியாத ஒருத்தர் கூட பொய்யா ரெட்டை வாழ்க்கை வாழறத விட நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லதுதான? ஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணீட்டு நாம நம்ம இஷ்டபடி வாழலாம்ல்ல?" என்று விளக்கமாக சொன்னாள் லாவண்யா.

லாவண்யா சொன்னவற்றை கேட்டதும் சந்திரிகா, "I'm onboard," என்று சொன்னாள்.

சில நொடிகள் யோசித்த விக்டர், "உங்க ideaலாம் நல்லா தான் இருக்கு, இதுல ஒரு பெரிய ஓட்டை இருக்கே உங்க parents, நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போற நேரம் போக மத்த நேரம் முழுக்க அவங்க கண் முன்னாடி தான் இருந்ததாகணும் especially நீ லாவண்யா, அப்பவும் உங்க வாழ்க்கை ரெட்டை வாழ்க்கையா தான் இருக்கும், அதுக்கு எதாவது solution வச்சிருக்கீங்களா?" என்று கேட்டான்.

விக்டரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் இருவரும் யோசிக்க, "இந்த விஷயத்தை பத்தி நாம யோசிக்கவே இல்லையே," என்று சொன்னாள் லாவண்யா.

"தனி குடித்தனம், இந்த problemக்கான ஒரே solution, தனி குடித்தனம் போறதா சொல்லி எங்க ரெண்டு பேர்ல யார் வீட்டையாவது உங்க parentsக்கு காண்பிச்சுடுங்க," என்று சந்திரிகா சொன்னாள்.

"தனி குடித்தனம் போறதுன்னா சும்மா இல்லை சந்திரிகா, பிரசன்னா வீட்ல அதுக்கு ஒத்துக்குவாங்களா? அதையும் நாம யோசிக்கணும்," என்று சொன்னான் விக்டர்.

"என் parentsகிட்ட நான் பேசிக்கிறேன் விக்டர், அது இப்ப பிரச்சினை இல்லை, நாங்க தனி குடித்தனம் போனா எங்க parents எங்கள visit பண்ணனும்னு நெனச்சா எந்த வீட்டுக்கு போவாங்க? விக்டர் வீட்டுக்கா? இல்லை உங்க வீட்டுக்கா சந்திரிகா? அப்படி யார் வீட்டுக்கு போனாலும் அவங்க முன்னாடி நாங்க சேந்து இருக்க வேண்டியது அவசியம்," என்றான் பிரசன்னா.

உன்னருகில் நானிருந்தால் IINơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ